Saturday, May 4, 2024
Home > செய்திகள் > நேற்று ஆளுநர்…! இன்று உச்சநீதிமன்றம்..! கலக்கத்தில் முதல்வர் ஸ்டாலின்..?

நேற்று ஆளுநர்…! இன்று உச்சநீதிமன்றம்..! கலக்கத்தில் முதல்வர் ஸ்டாலின்..?

14-2-22/15.30PM

அரியலூர் : தஞ்சை மாவட்டம் அரியலூரை சேர்ந்த லாவண்யா எனும் சிறுமி கட்டாய மதமாற்ற முயற்சியால் தற்கொலை செய்துகொண்டார். இது இந்தியாவெங்கும் பெருத்த அதிரவலைகளை ஏற்படுத்தியது. பிஜேபி மற்றும் ஹிந்து அமைப்புகள் போராட்டத்தை முன்னெடுத்ததும் பள்ளியை சகாயமேரி என்பவர் கைதுசெய்யப்பட்டார்.

மாணவி லாவண்யா வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கவேண்டும் என மதுரை கிளையில் லாவண்யாவின் பெற்றோர் தரப்பில் மனு கொடுக்கப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம் வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது. சிபிஐ வசம் வழக்கை ஒப்படைக்க கூடாது என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றை தாக்கல் செய்தது.

தமிழக காவல்துறை சார்பில் தாக்கப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சஞ்சீவ் கண்ணா மற்றும் திரிவேதி ஆகிய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் சிபிஐ விசாரிக்க தடைகோர முடியாது என தெரிவித்துள்ளது. மேலும் இந்த வழக்கில் கட்டாய மதமாற்றம் என்கிற கோணத்திலும் கவனமாக சிபிஐ விசாரிக்கவேண்டும் என தெரிவித்துள்ளது.

`

வழக்கு தொடர்பான ஆவணங்களை தமிழக அரசு சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் இதை ஒரு கவுரவ பிரச்சினையாக தமிழக அரசு கருத கூடாது என்று நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது. இது திமுகவுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. மேலும் கடந்த சிலநாட்களுக்கு முன் லாவண்யா வழக்கில் கைது செய்யப்பட்ட சகாயமேரி ஜாமீனில் வெளிவந்தார்.

அவரை திமுக எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ் பொன்னாடை போர்த்தி வரவேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் சிபிஐ பிடி இறுகும் பட்சத்தில் பல மிஷனரிகளின் பித்தலாட்டங்கள் வெளிவரும் என அரியலூர் மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

```
```

இதுகுறித்து பேசிய தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை முதல்வர் ஸ்டாலின் இப்போதாவது இறந்த மாணவியின் குடும்பத்தை சந்திப்பாரா என கேள்வியெழுப்பியுள்ளார். இதனிடையே நேற்று மேற்குவங்க ஆளுநர் முதல்வர் ஸ்டாலினை விளாசியெடுத்த நிலையில் இன்று உச்சநீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்திருப்பது முதல்வர் ஸ்டாலினுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.

….உங்கள் பீமா