Sunday, May 19, 2024
Home > செய்திகள் > கூடல்மாணிக்யம் திருவிழா நடன சர்ச்சை..! மடைமாற்றும் அமைச்சர்..!

கூடல்மாணிக்யம் திருவிழா நடன சர்ச்சை..! மடைமாற்றும் அமைச்சர்..!

2-4-22/11.00AM

கேரளா : கேரளா மாநிலத்தில் புகழ்பெற்ற பழமையான கூடலமாணிக்யம் திருக்கோவிலில் வருகிற ஏப்ரல் 15 தொடங்கி 10 நாட்கள் தேசிய நடனத்திருவிழா நடைபெற உள்ளது. இந்த திருவிழாவில் கேரளாவை சேர்ந்த பிரபல பரதநாட்டிய கலைஞர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

இந்த நடனத்திருவிழாவில் இஸ்லாமிய நடனக்கலைஞரான மான்சியா வி.பி யின் நடனம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மான்சி ஒரு ஹிந்துவை மணந்துகொண்டவர். மேலும் ஹிந்து மத நம்பிக்கைகளை ஒதுக்குபவர் என கூறப்படுகிறது. ஹிந்துவை மனத்துக்கொண்டாலும் மதம் மாறாமல் இஸ்லாமியராகவே தொடர்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

`

இதனிடையே கூடலமாணிக்யம் தேவசம்போர்டின் சார்பாக மான்சியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு பின்னர் நிராகரிக்கப்பட்டது. இதைத்தொடந்து நாட்டிய கலைஞர்களான அஞ்சு அரவிந்த் மற்றும் தேவிகா சஜீவன் மற்றும் கார்த்திக் மணிகண்டன் ஆகியோர் நடன நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப்போவதில்லை என அறிவித்துள்ளனர். இதுகுறித்து பேசிய பரதக்கலைஞர் அஞ்சு ” நடனத்திற்கு மதம் இல்லை. தேவசம்போர்டு முடிவுக்கு நாங்கள் கண்டனம் தெரிவிக்கிறோம்” என கூறினார்.

```
```

கேரள தேவசம்போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணண் கூறுகையில் ” இரிஞ்சுக்குள கூடல் மாணிக்யம் தேவசம்போர்டு தந்திரிகளே இதுகுறித்து முடிவு எடுக்கவேண்டும். சீக்கிரமே இதற்கான தீர்வு காண்பார்கள் என நம்புகிறேன். ஏப்ரல் 15 முதல் 25 வரை 10 நாட்கள் இந்த தேசிய அளவிலான நடன நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நடனத்திற்கு மதம் இல்லை. மதச்சாயம் போசுவது மிகவும் முட்டாள்தனமானது” என தெரிவித்தார்.

….உங்கள் பீமா