இந்திய அரசு கடந்த வருடம் பலான சமாச்சாரங்களை வெளியிடும் பல வெப்சைட்டுகளை முடக்கியது. அதை தொடர்ந்து இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை அடிமையாக்கிய பல சீன அப்ளிகேஷன்களுக்கு தடை விதித்தது.
இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்ட பல அப்ளிகேஷன்கள் இதே போல முடக்கப்பட்டது. இந்நிலையில் VIRTUAL PRIVATE NETWORK எனப்படும் VPN சர்வரை தடை செய்ய நாடாளுமன்ற நிலைக்குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

இதுகுறித்து விளக்கமளித்த நிலைக்குழு கமிட்டி ” VPN அப்ளிகேஷன் இந்தியாவில் தடை செய்யப்படவேண்டும். அதில் உள்ள தீங்குகள் பின்விளைவுகள் என்ன என தெரியாமல் அதை பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் நெட்வொர்க்குகள் மற்றும் டிஜிட்டல் சொத்துக்களை பாதுகாக்க இந்த VPN பயன்படுத்துகின்றனர்.
ஊரடங்கின்போது பெரும்பாலான நிறுவனங்களுக்கு VPNடூல்ஸ் மிக முக்கியமானதாக மாறியது. தடைசெய்யப்பட்ட இணையதளத்தையும் எளிதில் அணுக செய்கிறது. இதில் ஆபத்து அதிகம் கண்ணுக்கு தெரியாத சைபர் குற்றவாளிகள் எளிதில் ஆவணங்களையோ மற்ற தரவுகளையோ வாய்ப்பாக அமைந்துவிடுகிறது.
அதனால் இந்த குழு VPN ஐ தடை செய்ய உள்துறை அமைச்சத்திற்கு பரிந்துரைக்கிறது. மேலும் மின்னணு மற்றும் அமைச்சகத்துடன் சேர்ந்து புதிய நவீன தொழிநுட்பத்தை உருவாக்க முனையவேண்டும் பரிந்துரைக்கிறது.” என தெரிவித்தது.
VPN அப்ளிகேஷனை நிறுவனங்களை விட இளைஞர்கள் முற்றும் சிறுவர்கள் தவறான வழியில் உபயோகப்படுவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இனி விரைவில் VPN சேவையும் முடக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.