Sunday, May 12, 2024
Home > செய்திகள் > காஞ்சிபுரத்தில் பரபரப்பு..! பணிநியமன ரத்து..! ஆளும்கட்சிக்கு வேண்டப்பட்டவர்கள் நியமனமா..?

காஞ்சிபுரத்தில் பரபரப்பு..! பணிநியமன ரத்து..! ஆளும்கட்சிக்கு வேண்டப்பட்டவர்கள் நியமனமா..?

13-12-21/15.20pm

காஞ்சிபுரம் : சமீபத்தில் சில நாட்களுக்கு முன்னர் காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் தாலுகா கிலாய் கிராமத்தில் இருந்த பழமையான கோவில் ஒன்று இடித்து தகர்க்கப்பட்டது. அந்த கோவிலை இடித்து தள்ள நேரடியாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரான எம். ஆர்த்தி நேரடியாக கிலாய் கிராமத்திற்க்கே சென்றார். அவசரம் அவசரமாக எந்த ஒரு முன்னறிவிப்புமின்றி கோவில் ஜேசிபி இயந்திரம் கொண்டு துரிதமாக தரைமட்டமாக்கப்பட்டது.

“இந்த அசுர வேகத்தை அலுவல் பணியில் மாவட்ட ஆட்சியரோ அல்லது அலுவலக பணியாளர்களோ காட்டவில்லை. மேலும் கோவில் இருந்த அதே இடத்தில் சர்ச் ஒன்றும் அரசியல் பிரமுகர் ஒருவரும் ஆக்கிரமித்து கட்டிடங்களை எழுப்பியிருக்கிறார்கள். ஆளும் கட்சிக்கு பயந்து மாவட்ட நிர்வாகம் அமைதி காக்கிறது” என கிலாய் கிராம மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் “காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலவிடுதிகளுக்கு சமையலர் பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு மற்றும் பொதுவிளம்பரம் மூலம் பணி நாடுநர்களுகளிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் கடந்த 21-1-21 முதல் 22-1-21 வரை நடைபெற்ற விண்ணப்பங்கள் ரத்து செய்யப்படுகிறது.

`

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்த தேர்வுப்பணிகள் தேர்வுக்குழுவால் இறுதிசெய்யப்படாமல் உள்ளன. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பணிநாடுநர் பெறப்பட்டு ஆறுமாதங்கள் கடந்து விட்டதாலும் நிர்வாக காரணங்களாலும் சமையலர் பணிக்கு நடைபெற்ற தேர்வுகள் ரத்து செய்யப்படுகின்றன” என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

```
```

இதுகுறித்து அதிமுகவினர் கூறுகையில் ” பிற்படுத்தப்பட்ட மக்களை மாவட்ட நிர்வாகம் வஞ்சிக்கிறது. ஆளும் கட்சிக்கு வேண்டப்பட்ட நபர்களை நியமிப்பதற்காக அரசியல் காழ்புணர்ச்சியோடு திமுக கைப்பாவையாக மாவட்ட நிர்வாகம் செயல்படுகிறது” என விமர்சிக்கின்றனர்.

….உங்கள் பீமா