Monday, February 10, 2025
Home > ஆன்மிகம் > கோவில் வருமானம் வேண்டும்..! கோவில்கள் வேண்டாமா..! அழிந்து வரும் நீடாமங்கலம் அரவூர் கோவில்..!

கோவில் வருமானம் வேண்டும்..! கோவில்கள் வேண்டாமா..! அழிந்து வரும் நீடாமங்கலம் அரவூர் கோவில்..!

20-11-21/10.30am

நீடாமங்கலம் : தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான கோவில்கள் இன்று பரிதாபமாக காட்சியளிக்கிறது. ஆனால் அரசோ கோவில்களின் வருமானத்தை பொது நல நிதி என்கிற பெயரில் எடுத்துக்கொள்கிறது. கோவிலுக்கு சொந்தமான நிலங்களை சந்தை நிலவரத்திலிருந்து பலமடங்கு குறைவாக குத்தகைக்கு விட்டு அந்த வருமானத்தையும் எடுத்துக் கொள்வதாக பக்தர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

கோவில்களின் நிதியை பயன்படுத்த அரசுக்கு எவ்வளவு உரிமை உள்ளதோ அதே அளவிற்கு பராமரிப்பிலும் பங்கு உண்டு என்பதை திமுக அரசு மறக்க கூடாது என பக்தர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் நீடாமங்கலம் அரவூர் கிராமத்தில் உள்ள கார்கோடேஸ்வரர் மங்களாம்பிகை திருக்கோவில் மிகவும் சிதிலமடைந்துள்ளது. பல நூறு வருட பழமையான இந்த திருக்கோவில் தனியார் வசம் உள்ளது. சிவசுப்பிரமணிய உடையார் என்பவர் கோவிலை வருகிறார். சில வருடங்களாக ஏற்பட்ட பொருளாதார முடக்கத்தால் கோவிலில் சரிவர பூஜை செய்ய முடியாத அளவிற்கு கோவில் உள்ளது.

மேலும் இந்த கோவிலின் குருக்களான சந்தானம் கூறுகையில் ” ஆயிரம் பழமையான இந்த கார்கோடேஸ்வரர் மங்களாம்பிகை திருக்கோவில் பாராமரிக்க வசதியின்றி கிடக்கிறது. இங்கே வரும் பக்தர்கள் சிலர் தங்களால் ஆன உதவியை செய்து வருகின்றனர்” என தெரிவித்தார்.

`

கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் அரசியல் பிரமுகர்கள் சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதன் கோவிலின் பராமரிப்புக்கு இந்து சமய அறநிலையத்துறையை பக்தர்கள் அணுகியபோது அவர்கள் கைவிரித்து விட்டதாக கூறப்படுகிறது. கோவில்களின் நிதியை பயன்படுத்த அரசுக்கு எவ்வளவு உரிமை உள்ளதோ அதே அளவிற்கு பராமரிப்பிலும் பங்கு உண்டு என்பதை திமுக அரசு மறக்க கூடாது என பக்தர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

```
```

கோவில் குருக்கள் அலைபேசி எண் : 8870560573

……உங்கள் பீமா