16-1-22/11.37am
சென்னை : முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகாரளித்த விஜயநல்லதம்பி என்பவரை இன்று போலீசார் கைது செய்துள்ளனர். இது முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழக்கில் பெரும் திருப்பமாக அமைந்துள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி.. இவர் ஆவின் நிறுவனத்தில் வேலை சம்கி தருவதாக கூறி மூன்று கோடி அளவில் மோசடி செய்ததாக விஜயநல்லதம்பி என்பவர் புகாரளித்ததாக கூறப்படுகிறது. அதையடுத்து ராஜேந்திர பாலாஜி தலைமறைவானார். கர்நாடகாவில் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக இருப்பதை கண்டறிந்த தனிப்படை அவரை ஹாசன் பகுதியில் கைது செயது சிறையிலடைத்தது.

நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளின் பெயரில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு மூன்று வாரம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதனிடையே முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் சகோதரர் விஜயநல்லதம்பியிடம் அதிமுகவை சேர்ந்த ரவீந்திரன் என்பவர் ஆவின் நிறுவனத்தில் வேலைவாங்கி தர 30 லட்சம் கொடுத்துள்ளார்.

பணத்தை பெற்றுக்கொண்ட நல்லதம்பி வேலைவாங்கி கொடுக்காமல் போக்கு காட்டியுள்ளார். ஆனால் விஜய நல்லதம்பி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி தன்னிடம் மூன்று கோடி வாங்கி ஏமாற்றிவிட்டதாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

ராஜேந்திர பாலாஜி கைதையடுத்து தலைமறைவான விஜயநல்லதம்பியை கோவில்பட்டியில் இன்று காலை ஐந்து மணியளவில் போலீசார் கைது செய்துள்ளனர். நல்லதம்பி வாயை திறந்தால் பல உண்மைகள் வெளிப்படும் எனவும் ராஜேந்திர பாலாஜி ஏமாற்றினாரா இல்லையா என்பது வெளிச்சத்துக்கு வரும் எனவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
…..உங்கள் பீமா