Monday, May 13, 2024
Home > செய்திகள் > மத்திய அரசு அதிரடி..! முடக்கப்பட்ட செய்தி இணையதளங்கள் மற்றும் யூ டியூப் சேனல்கள்…!

மத்திய அரசு அதிரடி..! முடக்கப்பட்ட செய்தி இணையதளங்கள் மற்றும் யூ டியூப் சேனல்கள்…!

22-12-21/6.58am

டெல்லி : மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகம் அதிரடியாக செய்தி இணையதளங்கள் மற்றும் யூ டியூப் சேனல்களை தடை செய்துள்ளது. அதில் தமிழகத்தை சேர்ந்த சேனல்கள் இருக்கிறதா என தமிழக மக்கள் தேடி வருகின்றனர்.

கல்சா டிவி எனும் செய்தி நிறுவனம் 27,410 பார்வையாளர்களையும் 700 சந்தாதாரர்களையும் கொண்டுள்ளது. இந்த செய்தி நிறுவனம் தொடர்ந்து சீக்கியர்கள் பற்றிய தவறான தகவல்களை கொடுத்து வந்தது. அதே போல தி நேக்கேட் ட்ரூத் எனும் நிறுவனம் இந்த சேனல் ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவம் தவறாக நடந்து கொள்வதாகவும் அமித்ஷா மற்றும் மோடி மற்றும் இதர மத்திய அமைச்சர்களை பற்றிய தவறான வீடியோக்களையும் வெளியிட்டு வந்தது. இதன் சந்தாதாரர்கள் மற்றும் பார்வையாளர்களின் எண்ணிக்கை தலைசுற்ற வைக்கும். 8,89.71,816 பார்வையாளர்கள் மற்றும் 4,61,000 சந்தாதாரர்கள்.

தி பஞ்ச் லைன் சேனல் 1,16,000 சந்தாதாரர்களை கொண்டு அதே நேரத்தில் 2,01,31,840 பார்வையாளர்களையும் கொண்டிருந்தது. இந்திய இறையாண்மைக்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து வெளியிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. நியூஸ் 24 என்ற செய்தி நிறுவனம் தொடர்ந்து இஸ்ரேலை பற்றிய தவறான தகவலை மற்றும் திரித்துக் கூறிய தகவலை வெளியிட்டு வந்தது. அதே போல 48நியூஸ் எனும் சேனல் இந்திய சீன உறவு மற்றும் இந்தோ அமெரிக்க உறவு என்கிற தலைப்பில் தொடர்ந்து தவறான உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

`

பிக்ஸனல், ஹிஸ்டாரிகல் பேக்ட்ஸ், பஞ்சாப் வைரல், நயா பாகிஸ்தான் குளோபல்,கவர் ஸ்டோரி, கோ குளோபல் காமெர்ஸ், ஜுனைட் ஹலீம் அபிசியல் , தய்யாப் ஹனீப், ஸியின் அலி அபிசியல், மோஷின் ராஜ்புட் அபிஷியல், கனீஸ் பாத்திமா, சடாப் துர்ரானி, மியான் இம்ரான் அஹமத், மற்றும் நஜாம் உல் ஹசன் பாஜ்வா ஆகிய யூ ட்யூப் சேனல்களை மத்திய தகவல்தொடர்பு மற்றும் ஒளிபரப்புத்துறை தடை செய்துள்ளது.

இந்த சேனல்களில் மதிப்புக்குரிய மறைந்த முப்படை தளபதி பிபின் ராவத் குறித்தும் ஹெலிகாப்டர் விபத்திட்டு குறித்தும் முரணான தகவல்களை மேற்கண்ட சேனல்கள் சித்தரித்து கூறியுள்ளன. இதைவிட பெரிய கொடுமை துருக்கி ராணுவம் அயோத்தியில் வந்து இறங்கிவிட்டதாகவும் ராமஜென்ம பூமியை மீட்டெடுத்து பழிவாங்கப்போவதாகவும் செய்திகள் வெளியிட்டுள்ளன. மேலும் காபூலில் இருந்து தலிபான்கள் கிளம்பி காஸ்மீருக்கு வந்துகொண்டிருப்பதாகவும் செய்திகள் வெளியிட்டுள்ளன,

```
```

இத்தனை சேனல்களை முடக்க தெரிந்த மத்திய அரசுக்கு தமிழகத்தில் உள்ள சில சேனல்கள் கண்ணுக்கு தெரியவில்லையா எனவும் மத்திய தமிழக அமைச்சரான முருகன் இதை மத்திய அரசிடம் பரிந்துரைக்கவில்லையா என நெட்டிசன்கள் கேள்வியெழுப்பிவருகின்றனர்.

…..உங்கள் பீமா