Monday, January 30, 2023
Home > செய்திகள் > முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி சிலை வைப்பதில் சிக்கல்..! உயர்நீதிமன்றம் கிடுக்கிப்பிடி..!

முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி சிலை வைப்பதில் சிக்கல்..! உயர்நீதிமன்றம் கிடுக்கிப்பிடி..!

4-1-22/12.17pm

திருப்பூர் : அனுமதிபெறாமல் சிலை வைப்பது குறித்தும் ஏற்கனவே அனுமதிபெறாமல் வைக்கப்பட்ட சிலைகளை அகற்றுவது குறித்தும் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் பொதுமக்களுக்கு இடையூறாகவும் பொதுப்போக்குவரத்திற்கு இடைஞ்சலாகவும் பல இடங்களில் சிலைகள் நிறுவப்பட்டிருப்பதாக புகார்கள் எழுந்ததையொட்டி சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தது. அதில் தமிழகம் முழுவதும் அனுமதிபெறாமல் வைக்கப்பட்ட சிலைகளை அகற்றவேண்டும் எனவும் அனுமதி பெற்று வைக்கப்பட்ட சிலைகளை அரசு பூங்காக்கள் அமைத்து பராமரிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில் திருப்பூர் ரயில்நிலையத்திற்கருகே முதல்வர் ஸ்டாலினின் தந்தையான கலைஞர் கருணாநிதியின் சிலை வைக்க தீவிர ஏற்பாடு நடப்பதாக தெரிகிறது. அதையடுத்து திருப்பூரை சேர்ந்த திருமுருகன் தினேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியனுக்கு இதுகுறித்து கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

`

அதையடுத்து நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் தமிழக அரசு இதுகுறித்து இன்று விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அனுமதிபெறாமல் சிலை வைக்க தடை இருக்கும் நேரத்தில் திமுகவின் இந்த செயல்பாடுகள் நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் விதத்தில் இருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துவருகின்றன. மேலும் ரயில்நிலையத்தையொட்டி போக்குவரத்து நெரிசல் அதிகம் இருப்பதால் கருணாநிதி சிலை வைக்க முடியுமா என பொதுமக்களும் கேள்வியெழுப்பிவருகின்றனர்.

…..உங்கள் பீமா