Friday, February 7, 2025
Home > செய்திகள் > “காரியம் ஆகணும்னா … “என மார்க் சூபர்க் மானத்தை வாங்கிய ட்ரம்ப்..!

“காரியம் ஆகணும்னா … “என மார்க் சூபர்க் மானத்தை வாங்கிய ட்ரம்ப்..!

நேற்று பாக்ஸ் ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அமெரிக்க முன்னாள் அதிபர் ஊடகங்களையும் மார்க் சூபர்க்கையும் வெளுத்து வாங்கிவிட்டார். “நான் பதவியிலிருந்த போது மார்க் சூபர்க்கும் அவரது அழகான மனைவியும் ஒயிட் ஹவுஸுக்கு விருந்துக்கு வருவார்கள். தனக்கு காரியம் ஆகவேண்டுமெனில் எந்த எல்லைக்கும் செல்பவர் மார்க்.

ஹி இஸ் ரெடி டு கிஸ் மை ஆ.. ” என கூறியதோடு மீடியாக்களையும் திட்டி தீர்த்துவிட்டார். ஆஃப்கனில் மொழிபெயர்ப்பாளர்கள் உட்பட பலரை அங்கேயே கைவிட்டுவிட்டு வந்துவிட்டனர். அவர்கள் தான் பாகனின் அமெரிக்க படைக்கு உதவியவர்கள். இதே காரியத்தை நான் செய்திருந்தால் இந்த ஊடகங்கள் என்னை பதவியிலிருந்து தூக்கியெறிய முற்பட்டிருக்கும்.

```
```
`

ஜோபிடேனை வாழ்த்தி குடை பிடிக்கும் இந்த ஊடகங்கள் நான் செய்த நல்லவற்றை எடுத்து கூற மறுத்துவிட்டது. ட்விட்டர், பேஸ்புக், யூ ட்யூப் இவற்றிற்கு எதிரான என்னுடைய சட்டப்போராட்டம் தொடரும். மிக விரைவில் சமூக ஊடகங்களுக்கு எதிரான போராட்டம் வெடிக்கும்.” என தெரிவித்தார்.