Wednesday, March 19, 2025
Home > செய்திகள் > தலைமை பூசாரி கைது..! ஹரித்துவாரில் பரபரப்பு..!

தலைமை பூசாரி கைது..! ஹரித்துவாரில் பரபரப்பு..!

16-1-22/14.00pm

ஹரித்துவார் : சிறுபான்மையின பெண்களுக்கெதிரான கருத்துக்களை கூறியதாக காசியாபாத் தஸ்னா கோவிலின் தலைமை பூசாரி கைதுசெய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தரம்சன்சத் மாநாட்டில் கலந்து கொண்ட தலைமை பூசாரி யதி நரசிங்கானந்த் சிறுபான்மையின பெண்களுக்கெதிரான கருத்துக்களை கூறியதாக சொல்லப்படுகிறது. அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட சர்வானந்த் கட் அவதூறு பேச்சுக்களுக்காக ஏற்கனவே கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார். இதை கண்டித்து யதி நரசிங்கானந்த் வாசிம் ரவி மற்றும் தனது ஆதரவாளர்களுடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.

`

அங்கு வந்த காவல்துறையினர் தலைமை பூசாரி யதியை பலவந்தமாக கைது செய்தனர். பின்னர் அவரை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு தலைமை பூசாரி மீது 153ஏ சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிந்து சிறையிலடைத்துள்ளனர். ஏற்கனவே ஹரித்துவாரில் சிறுபானமயினருக்கு எதிராக பேசிய மூன்று துறவிகளை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

```
```

….உங்கள் பீமா