Monday, December 2, 2024
Home > பங்குச் சந்தை > மோட்டார்வாகன உற்பத்தி பங்குகள் லாபமா..?

மோட்டார்வாகன உற்பத்தி பங்குகள் லாபமா..?

2020-2021 நிதி ஆண்டில் இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் பங்குகள் கோவிட் காரணமாக உற்பத்தி மற்றும் விற்பனை சரிந்து முதல் இரண்டு காலாண்டுகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனால் இது தொடர்புடைய உபரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், இஞ்சினியரிங் நிறுவனங்கள், டயர் தயாரிக்கும் நிறுவனங்கள் சுணக்கம் அடைந்தன.

மேலும் பி.எஸ் 6 மற்றும் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பு போன்ற புதிய தொழில்நுட்ப விரிவாக்கத்தை செயல்படுத்தி வருகிறது.

கடந்த சில மாதங்களாக வாகன விற்பனையில் சற்று முன்னேற்றம் அடைந்துள்ளது. இதனால் மூன்று மற்றும் நான்காம் காலாண்டு முடிவுகள் நல்ல முறையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

`

வரும் பட்ஜெட்டில் மத்திய அரசு சில சலுகைகளை அறிவிக்க வாய்ப்புள்ளது. இதனால் வரும் காலங்களில் ஆட்டோ மோபைல், இஞ்சினியரிங், பேட்டரி உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் இதர உபரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களின் பங்குகள் நல்ல முன்னேற்றம் அடைய வாய்ப்புள்ளது.

வாடிக்கையாளர்கள் சிறந்த பங்குகளை தேர்வு செய்து 2 முதல் 3 ஆண்டு இலக்கு வைத்து இந்த பங்குகளை வாங்கும் பட்சத்தில் நல்ல லாபம் அடைய வாய்ப்புள்ளது.

குறிப்பாக டாடா மோட்டார்ஸ், டாடா பவர், பி.பீ.சி.யல், ஹிண்டு காப்பர், கிராவிடா, பாரத் எலக்ட்ரானிக்ஸ், எக்ஸைடு பேட்டரி, பாலிபிலக்ஸ், பாலிகேப், சி.ஜி பவர், சுப்ரஜித் இஞ்சினியரிங் மின்டா போன்ற பங்குகள் இரட்டிப்பு லாபம் தர வாய்ப்புள்ளது.

```
```

செளந்தரராஜன் சேதுராமன், நங்கநல்லூர்.

automobilesector #autoaccessories #manufacturing

Disclaimer: We are not a registered advisor of SEBI. Please contact registered advisor before making any investment