Sunday, October 1, 2023
Home > செய்திகள் > திமுக அமைச்சரை புகழ்ந்த கலைஞர் டிவி..! உண்மையை அம்பலப்படுத்திய டாக்டர் கிருஷ்ணசாமி..!

திமுக அமைச்சரை புகழ்ந்த கலைஞர் டிவி..! உண்மையை அம்பலப்படுத்திய டாக்டர் கிருஷ்ணசாமி..!

1-12-21/6.07AM

தூத்துக்குடி : தமிழகத்தில் சென்னை உட்பட பல நகரங்களில் கனமழை கொட்டித்தீர்க்கிறது. இதில் வெள்ளம் பாதித்த இடங்களை ஆய்வுசெய்தது போல திமுக அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். அதே போல திமுக அமைச்சர் கீதாஜீவனும் கனிமொழி எம்பியும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்து நிவாரணப்பணிகளை மேற்கொண்டதாக கலைஞர் டிவி செய்தி வெளியிட்டிருந்தது.

மேலும் அமைச்சர் கீதா ஜீவனையும் கனிமொழி எம்பியையும் மக்கள் வெகுவாக பாராட்டி வருவதாக செய்திகள் வெளியிட்டிருந்தது. ஆனால் தூத்துக்குடி பகுதியில் சென்னை போல பல இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த இடங்களை புதிய தமிழகம் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் நேரடியாக சென்று ஆய்வு செய்தார்.

`

தூத்துக்குடி வட்டாரங்களில் தொடர் ஆய்வு மேற்கொண்ட அவர் அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் எம்பி கனிமொழி ஆகியோர் மூன்று நாட்களுக்கு முன்னர் சென்ற அதே இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு அங்கிருந்த மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது தான் பல உண்மைகள் வெளிவந்தது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் இன்னும் மழைநீர் தேங்கி வடியாமல் இருக்கிறது.

```
```

இதுகுறித்து டாக்டர் கிருஷ்ணசாமி கூறுகையில் “தூத்துக்குடியில் நள்ளிரவில் ஓய்வில்லாமல் மழை பாதித்த பகுதிகளில் கனிமொழி MP – அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு: குவியும் பாராட்டு என்று மூன்று நாளைக்கு முன்பே புகழ்ந்த கலைஞர் டிவி. இன்று வரை தூத்துக்குடியில் மழை நீரை வெளியேற்ற அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என தெரிவித்துள்ளார்.

….உங்கள் பீமா