Friday, February 7, 2025
Home > அரசியல் > நிருபர்கள் கேள்வி..! மத்திய அமைச்சர் ஸ்ம்ரிதி இரானி கிண்டல்..!

நிருபர்கள் கேள்வி..! மத்திய அமைச்சர் ஸ்ம்ரிதி இரானி கிண்டல்..!

15-11-21/ 10.12am

டெல்லி : மத்திய அமைச்சர் ஸ்ம்ரிதி இரானியிடம் காங்கிரஸ் தலைவர் ப்ரியங்கா காந்தியை பற்றி கேள்விகள் எழுப்பிய நிருபர்களிடம் கிண்டலாக பதிலளித்தார்.

நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஸ்ம்ரிதி இரானி பல கேள்விகளுக்கு பதிலளித்தார். காங்கிரஸின் செயல்பாடுகள் குறித்தும் உத்திரபிரதேச தேர்தலில் இருக்கும் நான்குமுனை போட்டியை குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டது. மேலும் ப்ரியங்கா உங்களுக்கு போட்டியா எனவும் கேள்விகள் கேட்கப்பட்டது.

இதற்க்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ஸ்ம்ரிதி இரானி ” உத்திரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் அவர்களின் ஆட்சியை மக்கள் வெகுவாக விரும்புகிறார்கள். ஊரடங்கு காலகட்டத்தில் தொழில் வளர்ச்சி பாதிக்கப்படாமல் அடுத்தகட்டத்துக்கு எடுத்து சென்றிருக்கிறார். மத்திய அரசின் திட்டங்கள் நேரடியாக பயனாளிகளுக்கு செல்லும் வகையில் மாநில அரசு செயல்பாட்டுக்கு கொண்டிருக்கிறது.

`

பாரன்சிக் கல்லூரி மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனைகள் மற்றும் டிபென்ஸ் காரிடார் உள்ளிட்ட பல அரசு நிறுவனங்கள் உத்திரபிரதேசத்தில் திறக்கப்பட்டுள்ளன. மேலும் பல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய உற்பத்தி நிறுவனங்கள் என போட்டி போட்டுக்கொண்டு உத்திரபிரதேசத்தில் தொழில் தொடங்கி வருகின்றன.

காங்கிரஸ் ஒரு நூலறுந்த காற்றாடி. இனி உத்திரபிரதேசம் மட்டுமல்ல இந்தியாவில் எங்குமே காலூன்ற முடியாது. காங்கிரஸ் தலைவர் ப்ரியங்கா காந்தி எனக்கு போட்டியா என கேட்டீர்கள். பிரியங்காவுக்கு கிடைத்ததை போல மூளை வளர்ச்சி இல்லாத சகோதரரோ இல்ல்லையெனில் திருட்டுக்கு பெயர்போன கணவரோ எனக்கு இல்லை. அதனால் அவரை நான் போட்டியாக கருதவில்லை.

```
```

பெண்களின் அதிகாரம் பற்றி பேசும் காங்கிரஸ் தனது ஆட்சிக்குட்பட்ட ராஜஸ்தானில் நடக்கும் அவலங்களை கண்டுகொள்வதே இல்லை. முதலில் சொந்த மாநிலத்தில் நல்லாட்சி புரியட்டும்” என காங்கிரசை காட்டமாக விமர்சித்தார்.

……ஸ்டீபன் தங்கதுரை