Saturday, October 5, 2024
Home > செய்திகள் > சவுக்கு சங்கரை தோலுரித்த டாக்டர்.ஷ்யாம் கிருஷ்ணசாமி..!

சவுக்கு சங்கரை தோலுரித்த டாக்டர்.ஷ்யாம் கிருஷ்ணசாமி..!

13-2-22/17.10pm

சென்னை : ஊருக்கு ஒரு பிடாரி உண்டு என கிராமங்களில் ஒரு பழமொழி உண்டு. இது சாலப்பொருந்துவது நெறியாளர் நிருபர் எனகூறிக்கொள்ளும் சவுக்கு சங்கர் என்பவருக்கு மிகபொருந்தும். தனக்கு எதிர்க்கருத்து கொண்டோரை மட்டுமல்லாமல் எதிர்க்கட்சித்தலைவர்கள் பிஜேபியை சேர்ந்த பிரபலங்கள் ஆகியோரை ஆபாசமாகவும் அருவருப்பாகவும் பேசுவதில் வல்லவர் இந்த சவுக்கு.

புதியதமிழக்ம் கட்சியின் தலைவர்களுள் ஒருவரான டாக்டர் ஷ்யாம் கிருஷ்ணசாமி ஒரு பதிவிட்டிருந்தார். அதில் “மண்டியிட்டால் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைக்குமெனில் நமது உதயநிதிக்கு ஒரு சீட் வாங்கி கொடுத்திருக்கலாமே. ஏன் அவருக்கு படிப்பு வராதா. அதே கல்லூரியில் மருத்துவம் படித்து தற்போது திமுக எம்பிக்களாக இருக்கும் சிலரது பெயரை சொல்லவா” என அதில் கூறியிருந்தார்.

`

இதற்கு பின்னூட்டம் இட்ட சவுக்கு “ஏண்டா வளவளன்னு பேசிகிட்டு.61வயசுல ஒருத்தர் நீட் எழுதி மார்க் வாங்கியிருக்கார்.நீயும் எழுது.அப்புறமா பேசு” என ஒருமையில் பதிலளித்திருந்தார். இதற்க்கு பதிலடி கொடுத்த ஷ்யாம் அவர்கள் ” நான் நீட் எழுதி அரசு கல்லூரியில் எம்.எஸ்.முடித்து INI CET எழுதி எய்ம்ஸில் எம்.சி.ஹெச் படிக்கிறேன்.

ஆமா நீபடிக்கறப்போ நீட் இல்லையே. ஹரிஜன பையனா இருந்து கூடவா ஒரு ப்ரொபசனல் டிகிரி கிடைக்கல. அந்த 61 வயதுக்காரர் போல நீயும் முயற்சிக்கலாமே” என பதிலடி கொடுத்துள்ளார். மேலும் ” நீதிபதி உட்பட ஊரார் கருத்துக்கு எல்லாம் சாதியை காரணமாக கற்பிக்க தெரிந்த உனக்கு நீ ஹரிஜன பையன் என சொல்லுவது சில்லறைத்தனமாக தெரிகிறதா.

```
```

திராவிட ஸ்டாக் என்ற அடையாளத்தில் ஒளிந்துகொண்டு புனைபெயரில் பலர் இருப்பதே அவர்களின் கருத்தில் இருக்கும் சாதி மத உள்நோக்கத்தை மறைக்கவே” என பதிவிட்டு சவுக்கு சங்கரை நோக்கி தனது சாட்டையை வீசியிருக்கிறார் டாக்டர்.ஷ்யாம் கிருஷ்ணசாமி. இவரது இந்த பதிலடி இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

…..உங்கள் பீமா