Saturday, September 24, 2022
Home > அரசியல் > அசிங்கப்பட்ட திமுக..! வெளில போய் வச்சுக்கோ துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு..!

அசிங்கப்பட்ட திமுக..! வெளில போய் வச்சுக்கோ துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு..!

29-11-21/14.45pm

டெல்லி : டெல்லி பாராளுமன்றத்தில் இன்று குளிர்கால கூட்டத்தொடர் இனிதாக ஆரம்பித்தது. அதில் பேசிய திமுக எம்பி ஒருவரை துணை ஜனாதிபதி கடிந்து கொண்டது திமுகவுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி பாராளுமன்றத்தில் முதல் மசோதாவாக வேளாண்சட்டங்கள் திரும்பப்பெறும் மசோதா நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தொடரில் திமுக எம்பிக்களுக்கு பேச வாய்ப்பளிக்கப்பட்டது. அதில் பேசிய கே.ராமசாமி நடராஜன் ராஜேஷ்குமார் எனும் நான் என்று பேசிவிட்டு கடைசியில் வெல்க தளபதி வெல்க அண்ணன் உதயநிதி என பேசி முடித்தார்.

அதையடுத்து அதை குறிப்பிட்ட துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு ” பாராளுமன்ற கூட்டத்தில் இதைப்போல ஸ்துதி சொல்ல அனுமதியில்லை. நீங்கள் வெளியில் போய் எதுவேண்டுமானாலும் கூறலாம்” என நெற்றிப்பொட்டிலடித்தாற்போல கூறினார். மேலும் அவைகுறிப்பில் இந்த ஸ்துதி இடம்பெறக்கூடாது எனவும் கட்டளையிட்டார்.

நேற்று தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் ” நீட் தேர்வு விலக்கு பற்றி திமுக தனது கேள்விகளை பாராளுமன்றத்தில் எழுப்புமா அல்லது அமைதியாக இருக்குமா” என கேள்வியெழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அண்ணாமலை சொன்னது போல திமுக எம்பிக்கள் ஸ்துதி சொல்லவே பாராளுமன்றம் சென்றிருக்கிறார்கள் என பிஜேபியினர் விமர்சித்து வருகின்றனர்.

மேலும் மக்கள் பணியாற்ற நாடாளுமன்றம் செல்லும் செல்லும் உறுப்பினர்கள் தனிமனித ஸ்துதி செய்வது அநாகரிகமான செயல் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

……உங்கள் பீமா

இதர செய்திகள்  திசைமாறும் அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு..!? திமுக அரசு பதிலளிக்க நீதிமன்றம் கெடு

Leave a Reply

Your email address will not be published.

error: Content is Protected! © The Madras Telegram