Saturday, July 27, 2024
Home > செய்திகள் > வீடுதோறும் குடிகாரன்..! மாநில அரசின் வருவாய் பெருக்கும் திட்டம்..! பலே ஐடியா..!

வீடுதோறும் குடிகாரன்..! மாநில அரசின் வருவாய் பெருக்கும் திட்டம்..! பலே ஐடியா..!

4-11-21/ 15.48pm

இந்தியாவிலுள்ள பலமாநிலங்களின் வருவாய் மதுபானக்கடைகளையும் அதன் மீதுள்ள வரி வருவாயையுமே பெரிதும் சார்ந்திருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

மத்திய அரசு வருவாய் இழப்பீட்டு தொகை என மானியமாக நிதி வழங்கினாலும் மாநில அரசுகள் சலுகைகள் இலவசங்கள் என தேர்தல் வாக்குறுதியாக கொடுத்து ஆட்சியமைத்தபின் சில இலவசங்களை அறிவித்து கஜானாவை காலிசெய்வதாக குற்றசாட்டு எழுப்புகின்றனர் நடுநிலையாளர்கள்.

மறைந்த முதல்வர் 2010-2011 தேர்தலில் திமுக மீது அரசு கஜானாவை காலி செய்துவிட்டார்கள் என பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். அதன்பிறகு தடாலடியாக பேருந்து கட்டணம் இருமடங்காக உயர்த்தப்பட்டது என்பது வரலாறு.

`

இந்நிலையில் கம்யூனிஸ்டுகளின் வருவாயை பேருக்கும் உத்தி புதுவிதமாக உள்ளது. மக்களின் நலன்சார்ந்ததே கம்யூனிசம் என கூறிக்கொண்டு மக்கள் நலனுக்கு எதிராக கம்யூனிஸ்ட் அரசு செயல்படுவதாக எதிர்க்கட்சியினர் குற்றசாட்டை முன்வைக்கின்றனர். நேற்று திருவனந்தபுரம் தலைமையகத்தில் முதல்வர் மற்றும்சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.

அதில் ஒவ்வொரு IT நிறுவனங்களிலும் மதுபானக்கூடங்களை திறக்க ஆலோசனை செய்யப்பட்டு விரைவில் அனைத்து IT நிறுவனங்களிலும் இந்த திட்டம் அமுல்படுத்தப்படும் என அறிவித்துள்ளது.

```
```

இதற்கு காங்கிரஸ் பிஜேபி உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். ” வருவாயை பெருக்கும் முயற்சியில் மக்களை போதைக்கு அடைமையாக்க முற்படுவது வருந்தத்தக்க செயல். இதை வன்மையாக கண்டிக்கிறோம்” என குரல் கொடுத்து வருகின்றனர்.

…..உங்கள் பீமா

#kerala #pub #itcompanies