18-4-22/10.22AM
சென்னை : திமுக தலைவர் முக.ஸ்டாலின் முதல் அமைச்சர்கள் தொண்டர்கள் வரை தமிழை சரிவர உச்சரிக்க இயலாது என்ற விமர்சனம் பரவலாக எழுவதுதுண்டு. சமீபத்தில் பதவியேற்றுக்கொண்ட திமுக கவுன்சிலர் ஒருவர் பேசிய தமிழை நெட்டிசன்கள் கிண்டலடித்திருந்தனர்.

முக்கிய செய்தி : தமிழகத்தை சேர்ந்த டேபிள்டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன்(18) மேகாலயவில் சாலைவிபத்தில் உயிரிழந்தார்.
இந்த கூற்றை மெய்யாக்குவதுபோல சமீபத்தில் இலாகா மாற்றப்பட்ட அமைச்சர் நேற்று ஒரு பதிவிட்டு அதை பின்னர் நீக்கியுள்ளார். நேற்றுமுன்தினம் முதுகுளத்தூர் பகுதியை சேர்ந்த மாரிக்கண்ணன் என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவருக்கு தமிழக முதலமைச்சர் ஐந்து லட்சத்திற்கான காசோலையை வழங்க உத்தரவிட்டார். அதன்பேரில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பாதிக்கப்பட்டவர் குடும்பத்திற்கு அந்த காசோலையை வழங்கினார்.

இந்த செய்தியை ” மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் ஆணைக்கிணங்க முதுகுளத்தூர் இடையார்வாகைக்குளத்தை சேர்ந்த திரு.மாரிக்கண்ணன் அவர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவரது குடும்பத்தாருக்கு ஐந்து லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட்டது” என முதல்வர் கூறியதால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என பதிவிட்டு பின்னர் அதை நீக்கியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.
….உங்கள் பீமா