Saturday, April 20, 2024
Home > செய்திகள் > NDTVயின் விஷமத்தனம்..? வெளியான உண்மைகள்

NDTVயின் விஷமத்தனம்..? வெளியான உண்மைகள்

5-4-22/12.10PM

உத்திரபிரதேசம் : நேற்று முன்தினம் கோரக்பூரில் அமைந்துள்ள கோரக்நாத் திருக்கோவிலும் நுழையமுயன்ற அஹமத் முர்தஸா அப்பாஸி என்பவன் தடுக்க முயன்ற காவலர்களை கடுமையாக தாக்கினான். பின்னர் அல்லாஹு அக்பர் என கோஷமிட்டுக்கொண்டே பொதுமக்களை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.

இதனிடையே அவன் ஐஐடி பட்டதாரி என்றும் அவனுக்கு மனநிலை சரியில்லை என்றும் NDTV போன்ற கையூட்டு ஊடகங்கள் செய்தி ஒளிபரப்பி வருகின்றன. மேலும் ஒரு மனநிலை சரியில்லாதவன் மத கோஷங்களை முழக்கமிட்டுக்கொண்டு மாற்றுமத வழிபாட்டுத்தளத்திற்குள் நுழைந்து அனைவரையும் தாக்க முயன்றது ஏற்றக்கும்படியாக இல்லை என விமர்சித்து வருகின்றனர்.

`

இந்நிலையில் கையூட்டு மற்றும் வதந்திகளை வெளியிடும் செய்தி நிறுவனம் என கூறப்படும் குற்றம்சாட்டப்பட்டவனை ஐஐடி மாணவன் என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால் இதே NDTV ஜாமியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற துப்பாக்கிசூடு சம்பவத்தில் ஈடுபட்ட மாணவனை மாணவன் என கூறாமல் அவனது பெயரை கூறியது மட்டுமல்லாமல் ராமபக்தன் கோபால் என குறிப்பிட்டிருந்தது.

```
```

ஆனால் கோரக்பூர் சம்பவத்தில் பெயரை கூட குறிப்பிடாமல் ஐஐடி பட்டதாரி என குறிப்பிட்டு தனது மத அரசியல் விளையாட்டை மக்களிடையே விளையாடியுள்ளது. தனது தனிப்பட்ட ஹிந்து விரோத கொள்கையை இதன்மூலம் மக்கள் மத்தியில் விதைக்கப்பார்கிறது என நடுநிலையாளர்கள் விமர்சித்து வருகின்றனர்.

….உங்கள் பீமா