8-11-21/ 10.41am
சென்னை; பிஜேபி தலைவருக்கு திமுகவினர் தொடர் கொலைமிரட்டல் விடுவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. திமுகவினர் கருத்து மோதலுக்கு பதிலாக நேரடி மோதலுக்கு தயாராவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
சென்னையில் பெய்துவரும் தொடர்மழையால் நகரமே ஸ்தம்பித்துள்ளது.ஆங்காங்கே வீடுகளுக்குள் மழைவெள்ளம் புகுந்து மக்கள் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முதல்வர் குறிப்பிட்ட சில இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.
அவர் ஆய்வுக்கு திடீரென வரும் முன்பே அந்த இடங்களில் தமிழகத்தில் உள்ள அனைத்து மீடியாக்களும் குவிந்திருந்தன. மேலும் சாமியானா பந்தல் முதல்வர் வருகைக்காக போடப்பட்டிருந்தது. சரியாக காலையிலேயே அவர் வருகையை அறிந்து தயாராக வைக்கப்பட்டிருந்த உணவுப் பொட்டலங்கள் மக்களுக்கு வழங்கப்பட்டன.
இதனிடையே சென்னையில் 139 முகாம்கள் அமைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இருந்தாலும் அவைகள் எங்குள்ளன என்பதை பற்றிய குறிப்பு இல்லை. மேலும் சென்னையில் பல இடங்களில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் தவித்தனர்.
இந்நிலையில் சென்னை மக்கள் வெள்ளத்தால் அவதிப்படுவதை குறித்து பிஜேபி தலைவர் எஸ்.ஆர்.சேகர் ஒரு பதிவிட்டிருந்தார். அதில் உதயநிதி மற்றும் ஸ்டாலின் ஆகியோரை குறிப்பிட்டு இரண்டு பதிவுகளை போட்டிருந்தார். சென்னை வெள்ளத்தில் மிதக்கும் புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்திருந்தார்.
இதில் கொந்தளித்த திமுக ஆதரவாளர்கள் எஸ்.ஆர்.சேகரை தரக்குறைவாக விமர்சித்தனர். மேலும் நேற்று அவருக்கு வெளிநாட்டு தொலைபேசி எண்ணிலிருந்து தொடர் கொலைமிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து “சென்னையில் #இல்லந்தோறும்_வெள்ளம் தாராளமாக தந்தமையை சுட்டிக்காட்டியதால் நேற்று இரவு முதல் இதுவரை 100 க்கணக்கான பன்னாட்டு Call கள் மூலம் எனக்கு மிரட்டல். மிரட்டியவர்கள் இன்னும் மிரட்ட காத்திருப்பவர்களுக்கும் நன்றி” என எஸ்.ஆர்.சேகர்பதிவிட்டுள்ளார்.
……உங்கள் பீமா
sr sekhar bjp threaten calls dmk m stalin