Saturday, October 5, 2024
Home > செய்திகள் > இந்துக்களின் பண்டிகையான கார்த்திகை தீபத்தை ஆபாசமாக சித்தரித்த திராவிட விழுது..!

இந்துக்களின் பண்டிகையான கார்த்திகை தீபத்தை ஆபாசமாக சித்தரித்த திராவிட விழுது..!

21-11-21/16.27pm

சென்னை : இந்துக்களின் பண்டிகை எதுவாக இருந்தாலும் அதை ஆபாசமாக சித்தரிக்கும் போக்கு தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. அதிலும் திராவிடம் பேசி பெரியாரை பின்பற்றுகிறோம் என கூறும் திமுக மற்றும் திராவிட விழுதுகளின் அநாகரிகமான பதிவுகள் தொடர்கதையாக இருக்கிறது.

திகவினர் குறிப்பிட்ட ஒரு சாதியினரின் பூணுலை இழுப்பது ஒவ்வொரு கூட்டத்திலும் அந்த குறிப்பிட்ட சாதியை மட்டும் உள்நோக்கத்தோடு விமர்சிப்பது என்பதை தாண்டி இந்து மதத்தின் மீதே தொடர்ந்து சேற்றை இறைத்து வருகின்றனர். இதை பெரும்பான்மை மக்கள் சகஜமாக கடந்து செல்வது சமுதாயத்தின் விசித்திரம்.

`

இந்துக்களின் பண்டிகையான கார்த்திகை தீப திருவிழாவை இந்துக்கள் விமரிசையாக கொண்டாடிக் கொண்டிருக்க திராவிடம் பேசி பெரியார் பின்தொடர்கிறேன் பேர்வழிகள் ஆபாசமாக சித்தரித்து புகைப்படம் வெளியிட்டிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. மத சார்பற்ற முதல்வர் இந்துக்களுக்கு மட்டுமே மதச்சார்பின்மையை கையாள்கிறார் என விமர்சனம் எழுந்துள்ள நிலையில்,

```
```

இது போன்ற அநாகரிகமான குறிப்பிட்ட பெரும்பான்மை சமுதாயத்தை இழிவுபடுத்தும் இது போன்ற ஆட்களை தனது அதிகாரத்தால் கட்டுப்படுத்த மறுக்கிறார். ஆனால் திமுகவுக்கு எதிரான கருத்துக்களோ பதிவுகளோ கண்ணில் பட்டால் அவர்களுக்கு குண்டாஸ் நிச்சயம் என்பது கண்கூடு. இந்த அநாகரீகவாதிகளுக்கு எதிரான ஒற்றுமை பெரும்பான்மை சமுதாயத்தில் ஏற்படுமா என்பதே பொதுவான எதிர்பார்ப்பாக இருக்கிறது.

…..உங்கள் பீமா