Saturday, August 22, 2026
Home > செய்திகள் > நூறு ஆண்டுகால வரலாற்றை மாற்றி எழுதும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா..! இந்த மசோதாவா இன்று தாக்கல்..?

நூறு ஆண்டுகால வரலாற்றை மாற்றி எழுதும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா..! இந்த மசோதாவா இன்று தாக்கல்..?

28-3-22/9.00AM

புதுதில்லி : இன்று பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா மசோதா ஒன்றை தாக்கல் செய்ய இருக்கிறார். இது காவல்துறையினரிடையே பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐடென்டிபிகேஷன் ஆப் ப்ரைஸனர்ஸ் ஆக்ட் 1920 படி குற்றம் புரிந்தவர்கள் அல்லது குற்றம்சாட்டப்பட்டவர்கள் கைரேகை கால் ரேகை போன்றவற்றை எடுக்க கடும் கட்டுப்பாடுகள் இருந்தது. ரெடினா மற்றும் உள்ளங்கை அச்சு மற்றும் நடத்தை கண்காணிப்பு ஆகியவை மாஜிஸ்திரேட் ஒப்புதலுக்கு பின்னரே எடுக்கப்பட்டு வந்தது. இது காவல்துறையினருக்கு பெரும் இடைஞ்சலாக இருந்தது.

சுதந்திரமாக செயல்பட முடியாமல் இருந்ததாக கருதப்பட்டது. இதை கவனத்தில் கொண்ட மத்திய பிஜேபி அரசு இதற்கான தீர்வை காண நடவடிக்கைகள் மேற்கொண்டது. இதனடிப்படையில் பலகட்ட ஆராய்வுக்கு பின்னர் ஐடென்டிபிகேஷன் ஆப் ப்ரைஸனர்ஸ் ஆக்ட் 1920ஐ தற்போது திருத்தியமைத்துள்ளது மத்திய உள்துறை அமைச்சகம்.

திருத்தியமைக்கப்பட்ட புதிய மசோதாவின்படி குற்றம் சுமத்தப்பட்டு கைதான அல்லது சந்தேகத்தின் அடிப்படையில் கைதான யாருடைய கைரேகை கால் ரேகை உள்ளங்கை அச்சு பெருவிரல் ரேகை மற்றும் கண்விழி படலம் மற்றும் பிஸிக்கல் ,பயோலாஜிக்கல் மாதிரிகள் மற்றும் கையெழுத்து மாதிரிகள் ஆகியவற்றை இனி காவல்நிலைய அதிகாரி அல்லது சிறைத்துறை அதிகாரி ஆகியோர் நீதிமன்ற உத்தரவின்றியே பெற இயலும்.

மேலும் நடத்தை கண்காணிப்புகளுக்கும் நீதிமன்ற ஒப்புதல் தேவையில்லை என தெரிகிறது. இந்த வரலாற்று சிறப்புவாய்ந்த மசோதாவை இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்ய உள்ளார்.

இது பிஜேபியின் மற்றொரு சாதனை மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. கிட்ட்டத்தட்ட 100 வருடங்கள் கழித்து இந்த மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. 1973ல் சிறு சிறு திருத்தங்கள். கொண்டுவரப்பட்டிருந்தாலும் முற்றிலும் மாற்றியமைக்கப்பட்ட இந்த மசோதா பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மசோதா என்பது குறிப்பிடத்தக்கது.

…..உங்கள் பீமா