15-11-21/8.30am
அருப்புக்கோட்டை : தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலைக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக தொண்டரை விருதுநகர் ஐடி விங் உறுப்பினர்கள் மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அருப்புக்கோட்டை வட்டம் ராமசாமி புரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் திமுக உறுப்பினர். கடந்த 11ஆம் தேதி தனது முகநூலில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் அண்ணாமலை அவர்களை சங்கை அறுப்பேன் என கூறி கொலை மிரட்டல் விட்டதோடு தரக்குறைவான கண்ணியமற்ற வார்த்தைகளில் ஆபாசமாக பேசினார்.
மேலும் அண்ணாமலை நிவாரண உதவிகள் செய்வது ஆய்வுகள் மேற்கொள்வதை சுட்டிக்காட்டி மிகமிக தாழ்ந்த முறையில் விமர்சனம் செய்தார். இதையறிந்த பிஜேபி விருதுநகர் உறுப்பினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அடுத்த சில மணிநேரங்களிலேயே திமுக தொண்டர் ஆறுமுகம் பகிரங்க மன்னிப்பு கோரி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
இது அருப்புக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இதுவரை பிஜேபி மற்றும் அதன் தலைவர்களை ஒருமையில் ஆபாசமாகவும் பேசிவந்த நபர்களுக்கு முதன்முறையாக பிஜேபி பயம் எனும் உணர்வை கொடுத்துள்ளது. இந்த பதில் அதிரடியை எதிர்பார்க்காத திமுக சற்றே கலங்கிப்போயுள்ளது.
அண்ணாமலை அவர்களின் வரவுக்குப்பின் தமிழகத்தில் பிஜேபி அபார வளர்ச்சி பெற்றிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அதே போல பிஜேபியின் கண்ணியமான நடவடிக்கைகளை மக்கள் பெரிதும் பாராட்டிவருகின்றனர். எந்த பிஜேபி தொண்டனும் தரம்தாழ்ந்து ஆபாச வார்த்தையில் தலைவர்களை இகழ்ந்ததில்லை என பிஜேபியினர் தெரிவிக்கின்றனர்.
…..உங்கள் பீமா