9-4-22/10.21AM
உத்திரபிரதேசம் : முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் ட்விட்டர் அக்கவுண்ட் இன்று அதிகாலை ஹேக் செய்யப்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. அடையாளம் தெரியாத மர்மநபர்களால் ஹேக் செய்யப்பட்டதாக தெரிகிறது.

உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அலுவலகத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் அக்கவுண்ட் அதிகாலை ஹேக் செய்யப்பட்டது. நான்குமணி நேர போராட்டத்திற்கு பின்னர் கணக்கு ஓரளவு மீட்டெடுக்கப்பட்டுள்ளது.

பின்னர் ஹேக்கர்கள் பதிவிட்ட இடுகைகள் நீக்கப்பட்டு வருகின்றன. UPCMO அதிகாரபூர்வ அக்கவுண்டில் இருந்து 400 முதல் 500 டிவீட்கள் பதிவிடப்பட்டது.
மேலும் முதல்வரின் படத்தை நீக்கிவிட்டு குரங்கின் படத்தை பதிவிட்டிருந்தனர். இந்த ட்விட்டர் கணக்கு 29 நிமிடங்களுக்கு ஹேக் செய்யபட்டதாக சைபர் போலீசார் பதிவு செய்தனர். முதல்வரின் அக்கவுண்ட்டை பின்தொடர்பவர்கள் முதல்வர் மற்றும் காவல்துறையினரிடம் ஸ்கிரீன்சாட்டுடன் புகாரளித்தபின்னரே இந்த சைபர் அட்டாக் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதுகுறித்து உத்திரபிரதேச அரசு கூறுகையில் சைபர் நிபுணர்கள் விசாரணைக்கு பிறகு காரணமானவர்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.
….உங்கள் பீமா