Thursday, April 30, 2026
Home > செய்திகள் > எங்கள் பெண்களை தொட்டால்..! சாமியாரின் சர்ச்சை பேச்சு

எங்கள் பெண்களை தொட்டால்..! சாமியாரின் சர்ச்சை பேச்சு

9-4-22/11.18AM

உத்திரபிரதேசம் : சமூக வலைதளத்தில் ஹிந்து துறவி ஒருவர் பேசிய வீடியோ வைரலானதை தொடர்ந்து உத்திரபிரதேச காவல்துறை வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறது.

கைராபாத் பகுதியை சேர்ந்த துறவியான பஜ்ரங் முனிதாஸ் என்பவர் சிதாப்பூர் பகுதியில் தனது வாகனத்தில் இருந்துகொண்டே மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில் “எங்கள் பகுதியை சேர்ந்த பெண்ணை யாராவது தொட்டால் உங்கள் வீட்டு பெண்களை கடத்தி வந்து கற்பழிப்பேன்” என கூறினார். இவரது பேச்சுக்கு கூடியிருந்த மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

துறவி ஒருகுறிப்பிட்ட சிறுபான்மையின பெண்களை குறிவைத்து பேசியதாக சமூகவலைத்தளங்களில் வீடியோ வைரலானது. அதைத்தொடர்ந்து மேற்குவங்க தேர்தல் நேர கலவரத்தில் பெண்கள் பலர் கற்பழிக்கப்பட்டபோதும் தமிழகத்தில் சிறுமிகள் தொடர்ந்து பாலியல் அத்துமீறலுக்கு ஆளானபோதும் கள்ளமவுனம் காத்துவந்த தேசிய மகளிர் ஆணையம் இந்த வழக்கை தாமாக முன்வந்து எடுத்ததோடு மாநில டிஜிபிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சிதாப்பூர் நகர ஏ.எஸ்.பி கூறியது “துறவி பேசியதாக கூறப்படும் வீடியோ ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளது. வீடியோவின் உண்மைத்தன்மை தெரியும்பட்சத்தில் சட்டநடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். நிரூபிக்கப்பட்டால் கடுமையாக தண்டனை இருக்கும்” என கூறியுள்ளார்.

https://twitter.com/zoo_bear/status/1512036559960248323?t=2vaPbXrbkubNzCeydfuw-w&s=19

எந்த சமூகத்தை சேர்ந்தவராக இருந்தாலும் அத்துமீறி பேசுவது தவறு. அதேநேரத்தில் “ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் தவறு செய்யும்போது அதையும் நாம் சட்டப்படி அணுகி தண்டனை பெற்றுத்தர முன்வரவேண்டும்” என நடுநிலையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

….உங்கள் பீமா