Monday, May 20, 2024
Home > அரசியல் > உங்க அப்பன் பணமா..? கொந்தளித்த யோகி..!

உங்க அப்பன் பணமா..? கொந்தளித்த யோகி..!

உத்திரபிரதேசம் : எதிர்க்கட்சி தலைவர்கள் தங்கள் தோல்வியிலிருந்து இன்னும் மீள முடியாததால் சொல்லமுடியாத மனநோய்க்கு ஆளாகியிருப்பதாக பிஜேபியினர் விமர்சித்து வருகின்றனர். அதனாலேயே தரமற்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் கண்ணியமற்ற வார்த்தைகளை பிரயோகிப்பதாகவும் தொடர் விமர்சனத்தை முன்வைக்கின்றனர்.


இந்நிலையில் நேற்று ஆளுநரின் உரை மீதான விவாதம் உத்திரபிரதேச சட்டமன்றத்தில் நடைபெற்றது. இந்தவிவாதத்தில் மாநில துணைமுதலமைச்சர் மௌரியா பங்கேற்றார். அவர் தனது உரையின்போது முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் அரசின் குறைபாடுகளை பட்டியலிட்டதோடு தற்போதைய பிஜேபி அரசின் செயல்பாடுகளுடன் ஒப்பிட்டு பேசினார்.
அவர்கூறுகையில் ” அகிலேஷின் செயல்பாடுகள் ஏதாவது நல்லதாக இருந்திருந்தால் குழப்பம் மிகுந்த சமாஜ்வாடியை மக்கள் சுத்தமாக ஒதுக்கியிருக்க மாட்டார்கள். எதிர்க்கட்சித்தலைவர் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியதாக சோர்வின்றி சொல்கிறார். அவரின் ஐந்தாண்டு பணிகளை நினைத்து நிச்சயமாக சோர்வடைந்திருப்பார்.



```
```
`
 
உங்களுக்கு ஏதேனும் நோய் உள்ளதா. அப்படி இருந்தால் நிச்சயமாக சோதனைக்கு உட்படுத்தப்படுவீர்கள். எதிர்க்கட்சி தலைவர் எங்கேயாவது சிகிச்சை பெறவேண்டும். பிஜேபி அறிமுகப்படுத்தும் ஒவ்வொரு திட்டங்களிலும் நீங்கள் ஸ்டிக்கர் ஓட்டும் நோயிலிருந்து விடுபட்டு வெளியே வரவேண்டும். அடுத்த 25 ஆண்டுகளில் உங்கள் எண்ணிக்கை ஐந்து கூட வராது.சாலைகள், விரைவுச்சாலைகள் என உருவாக்கியது யார்” என துணைமுதல்வர் கூறினார்.
 
இதற்க்கு பதிலளித்த அகிலேஷ் யாதவ் ” சாலை அமைக்க உங்கள் தந்தையிடமா பணம் வாங்குகிறீர்கள்” என கொந்தளிக்க அதுவரை அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த முதல்வர் யோகி ஆதித்யநாத் விஸ்வரூபம் எடுத்தார். ” மதிப்பு மிக்க தலைவருக்கு எதிராக அநாகரிகமான வார்த்தையை பயன்படுத்துகிறீர்கள். இது அழகல்ல. நான் மிக பணிவாக சொல்கிறேன். நீங்கள் இப்படி ஆத்திரம் அடைந்திருக்க கூடாது.



 
நாங்கள் செய்திருக்கும் செய்துகொண்டிருக்கும் வளர்ச்சிப்பணிகளை பட்டியலிட அரசுக்கு உரிமை உண்டு. ஒப்புதலும் மறுப்பும்தான் ஜனநாயகத்தின் பலம். எதிர்க்கட்சி தலைவரின் பல கூற்றுக்கள் தவறாக இருக்கலாம். அதை நாங்கள் கேட்கிறோம். அதற்காக எல்லாவற்றையும் கேட்டு அமைதியாக இருக்க முடியாது. தேவையான இடத்திலும் நேரத்திலும் தக்க பதிலடி கொடுக்கப்படும்.
 
தகாத வார்த்தைகளை அவைகுறிப்பில் இருந்து நீக்கவேண்டும்” என முதல்வர் யோகி கூறினார். அதையடுத்து சமாஜ்வாடியினரால் ஏற்பட்ட குழப்பமும் கூச்சலும் யோகியின் அதிரடி பேச்சால் முடிவுக்கு வந்தது.
 
……உங்கள் பீமா