22-2-22/13.35pm
மும்பை : கடந்த அக்டோபர் மாதம் பிரபல பாலிவுட் நடிகரான ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரை மும்பை ஜோனல் டைரக்டர் சமீர் வான்கடே நேரடியாக களத்தில் இறங்கி கைது செய்தார்.
அப்போதிருந்து அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் விமர்சனங்கள் எழுந்தன. மேலும் அவரை மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக் நேரடியாக மிரட்டினார். சமீர் வான்கடேவுக்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டது. மேலும் அவர் மீது லஞ்சப்புகாரையும் மஹாராஷ்டிரா அரசு எழுப்பியது. போதிய ஆதாரம் இல்லாததால் வழக்கு பதியும் முன்பே நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் அவர் சார்ந்த சாதியை குறித்தும் அமைச்சர் நவாப் மாலிக் விமர்சிக்க வான்கடே நீதிமன்றத்தை நாடினார். அதன்பின்னர் அமைச்சர் நவாப் மன்னிப்பு கோரினார். அதையடுத்து சமீர் வான்கடே அரசியல் அழுத்தத்தால் இடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் சமீர் வான்கடே மீது கோபாரி காவல்நிலையத்தில் எக்ஸைஸ் இன்ஸ்பெக்டர் சத்யவான் நேற்று புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில் ” வாசி பகுதியில் அமைந்துள்ள சமீர் வான்கடேவுக்கு சொந்தமான சத்குரு பீர் பாருக்கான உரிமம் 21 வயதில் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த உரிமம் பெறும்போது அவருக்கு வயது 17. சமீர் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்” என குறிப்பிட்டுள்ளார். இதற்காகவே காத்திருந்தது போல தானே போலீசார் இந்திய தண்டனை சட்டப்பிரிவு 181,188,465(punishment of forgery) 468(forgery for purpose of cheating) மற்றும் 420, 471 ஆகிய பிரிவின்கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
ஷாருக்கான் மற்றும் அமைச்சர் நவாப் ஆகியோரின் வாரிசுகளை கைது செய்ததும் முதல்வர் தாக்ரேவின் மகனான ஆதித்யா தாக்ரேவை விசாரணைக்கு அழைத்ததுமே சமீர் பழிவாங்கப்பட காரணம் என சமீர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த வழக்குகளை தள்ளுபடி செய்ய நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை சமீர் தாக்கல் செய்துள்ளார். அதில் “எனது தாயார் கேட்டுக் கொண்டபடி அனைத்து ஆவணங்களிலும் கையெழுத்திட்டேன். அப்போது நான் சிறுவன். எனது தாயார் 2015ல் மரணமடைந்துவிட்டார்கள். இந்த வழக்கை தள்ளுபடி செய்ய கோரிக்கை விடுக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
…..உங்கள் பீமா