Friday, April 18, 2025
Home > செய்திகள் > மதத்திற்கு ஒரு சட்டம்..? கண்டுகொள்ளுமா அரசு..?

மதத்திற்கு ஒரு சட்டம்..? கண்டுகொள்ளுமா அரசு..?

15-1-22/17.00pm

சென்னை : சீரியலோ வெப் சீரிசோ திரைப்படமோ எதுவாக இருந்தாலும் தொடர்ந்து இந்து மத நம்பிக்கைகளை புண்படுத்தும் விதமாகவே காட்சிகள் வலிந்து திணிக்கப்படுவதாக இந்து அமைப்பினர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.

கடந்த அதிமுக ஆட்சியில் கறுப்பர் கூட்டம் எனும் யு ட்யூப் சேனல் ஒன்று தொடந்து இந்து மத நம்பிக்கையை விமர்சித்ததால் அந்த சேனல் முடக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது குண்டாஸ் போடப்பட்டது. ஆனால் அந்த குண்டாஸ் விலக்கி கொள்ளப்பட்டது தனி கதை. இப்பொது யூ டூ ப்ரூட்டஸ் எனும் பெயரில் இயங்கிவரும் ஒரு சேனல் கறுப்பர் கூட்டம் விட்டு சென்ற பணியை தொடர்ந்து வருகிறது.

அந்த சேனலின் உரிமையாளரான தஞ்சையை சேர்ந்த விஜய் என்பவர் துணை இயக்குனர் ஆவார். அவர் இந்து மத கடவுள்களை தொடர்ந்து ஆபாசமாக பேசி வந்த நிலையில் தற்போது வெளியிட்டுள்ள வீடியோவில் மிக கொச்சையாக இந்து மத நம்பிக்கைகளை பேசியதோடு மட்டுமல்லாமல் மிகவும் அருவருக்கத்தக்க வகையில் இந்து கடவுள்களை கொச்சைப்படுத்தி வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

`

சமீபத்தில் கோயம்புத்தூரை சேர்ந்த அனீஸ் எனும் இஸ்லாமியர் இஸ்லாமை பற்றி அவதூறாக பேசியதாக கூறி காவல்துறை அவரை கைது செய்தது. ஆனால் தொடர்ந்து ஆபாசமாக பேசி இந்து மத நம்பிக்கைகளை இந்து மத கடவுள்களை கொச்சைப்படுத்தி வரும் விஜய் என்பவரை கைது செய்யவோ அவர்மீது நடவடிக்கை எடுக்கவோ காவல்துறையும் தமிழக அரசும் தயக்கம் காட்டி வருவதாக இந்து அமைப்பினர் உட்பட அரசியல் கட்சியினரும் விமர்சித்துவருகின்றனர்.

```
```

இவரை போல ஒவ்வொரு மதத்தையும் ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட ஆரம்பித்தால் நாட்டில் நிலவும் சமூகநல்லிணக்கம் பாதிக்கப்படும் என்றும் சகோதரத்துவம் கேள்விக்குறியதாகிவிடும் என்றும் நடுநிலையாளர்கள் விமர்சித்து வருகின்றனர். தமிழக காவல்துறை சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கையெழுப்பி வருகின்றனர்.

…..உங்கள் பீமா