Thursday, March 28, 2024
Home > செய்திகள் > திருத்தணியில் பரிதாபம்..!உயிரை குடித்த பொங்கல் தொகுப்பு..!?

திருத்தணியில் பரிதாபம்..!உயிரை குடித்த பொங்கல் தொகுப்பு..!?

12-1-22/12.00pm

திருத்தணி : தமிழக அரசு வழங்கிவரும் பொங்கல் தொகுப்புகள் தரமற்றவையாக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்து வருகிறார். அவரின் கூற்றுப்போலவே கடந்த வாரம் பயனாளி ஒருவர் பெற்ற பொங்கல் தொகுப்பில் பல்லி இருந்தது.

கடந்த சிலநாட்களுக்கு முன்னர் திருத்தணியை சேர்ந்த நந்தன் என்பவர் பொங்கல் தொகுப்பு பெற்றுக் கொள்ள நியாயவிலைக்கடை சென்றார். அங்கு அவருக்கு வழங்கப்பட்ட தொகுப்பில் இருந்த புளியில் பல்லி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து நியாயவிலைக்கடையினரிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். அதற்க்குள் இந்த சம்பவம் சமூகவலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவியது.

இதையடுத்து விற்பனையாளர் சரவணன் நந்தன் மீது திருத்தணி காவல்நிலையத்தில் புகாரளித்தார். இதன்பேரில் நன்னடத்தை அலுவலர் ரமேஷ் நந்தன் மீது பிணையில் வெளிவரமுடியாத அளவில் வழக்கு பதிவு செய்தார். இதனால் வெறுத்துப்போன நந்தன் தற்கொலை செய்ய போவதாக கூறியுள்ளார்.

`

இதனிடையே நந்தனின் மூத்த மகனான குப்புசுவாமி என்பவர் (36) தனது தந்தைக்கு நேர்ந்த கதியை எண்ணி வீட்டிற்குள் சென்று அறைக்கதவை மூடி பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் திருத்தணி அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர்.

அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துவிட்டார். இதனால் திருத்தணி மக்கள் பலத்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

```
```

வழக்கு தொடுத்தவர்மீதே வழக்கு தொடுத்து ஒரு உயிர் பலியாகியிருப்பது தமிழக மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. மேலும் நந்தன் அதிமுகவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

…….உங்கள் பீமா