Monday, May 20, 2024
Home > செய்திகள் > அயோத்யா மண்டப சர்ச்சை..! தமிழக பிஜேபியினர் போராட்டம்

அயோத்யா மண்டப சர்ச்சை..! தமிழக பிஜேபியினர் போராட்டம்

11-4-22/15.13PM

சென்னை : சென்னை மேற்குமாம்பலத்தில் உள்ள ஸ்ரீராம சமாஜத்துக்கு சொந்தமான அயோத்யா மண்டபத்தை தமிழக ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கைப்பற்ற முனைந்துள்ளனர்.

தமிழக அரசு ஒருபுறம் நீர்நிலைகளை ஆக்கிரமித்துக்கட்டியிருப்பதாக கூறி பலகோவில்களை இடித்துவரும் நிலையில் ஒருபுறம் ஹிந்து கோவில்களின் தங்க ஆபரணங்களை உருக்க முயற்சி செய்துவருகிறது. இந்நிலையில் தனியாருக்கு சொந்தமான அயோத்யாமண்டபத்தை அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சி எடுத்துவருகிறது.

`

இதன் ஒருபகுதியாக உயர்நீதிமன்றத்தில் நடந்த இது தொடர்பான வழக்கில் தனியாருக்கு சொந்தமான இந்த மண்டபத்தை கோவில் என கூறி வாதிட்டது. மேலும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர உயர்நீதிமன்றமும் உத்தரவிட்டது. இதனிடையே இன்று அறநிலையத்துறை அதிகாரிகள் மண்டபத்தை கைப்பற்ற விரைந்தனர்.

```
```

பிஜேபி தலைவர்களுள் ஒருவரான வினோஜ்.பி.செல்வம் கவுன்சிலர் உமா அனந்தன் மற்றும் பொதுமக்கள் அதிகாரிகளை தடுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

…..உங்கள் பீமா

BIGNEWS : நாடாளுமன்ற நிலைக்குழுவில் முதல்வர் யோகி ஆதித்யநாத் முதன்முறையாக இடம்பிடித்துள்ளார்.