Friday, March 29, 2024
Home > செய்திகள் > பாஜக பிரமுகர் மீது துப்பாக்கி சூடு..! குறிவைக்கப்படும் பாஜக தலைவர்கள்..?

பாஜக பிரமுகர் மீது துப்பாக்கி சூடு..! குறிவைக்கப்படும் பாஜக தலைவர்கள்..?

28-12-21/11.09am

அமிர்தசரஸ் : பாஜக பிரமுகர்கள் தொடர்ந்து கொலை செய்யப்படுவதும் தாக்கப்படுவதும் சமீபகாலங்களாய் அதிகரித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அமிர்தசரஸில் நடிகையின் தந்தை மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டிருப்பது பரபரப்பை கிளப்பியிருக்கிறது. பஞ்சாப் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருபவர் ஷெனாஸ் கில். இவரது தந்தை சந்தோக் சிங் சுக். இவர் சமீபத்தில் பிஜேபியில் தன்னை இணைத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமிர்தசரஸில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது டிரைவருடன் காரில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ட்ரைவர் இயற்கை உபாதை என கூறி ஒரு இடத்தில் வாகனத்தை நிறுத்தியிருக்கிறார். சந்தோக்கின் காரை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் சாந்தோக்கின் கார் கதவுகளை தட்டியிருக்கின்றனர்.

`

ட்ரைவர் இருக்கையில் இருந்த சந்தோக் ஜன்னலை திறந்து பார்த்துள்ளார். இருசக்கரவாகனத்தில் வந்த மர்மநபர்கள் திடீரென மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுட ஆரம்பித்துள்ளனர். அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த சந்தோக்கின் பாதுகாவலர் மர்மநபர்களை பிடிக்க முயன்றார். அவர்கள் மீது செங்கற்களை வீசியெறிந்தார்.அதற்குள் அவர்கள் தப்பித்துவிட்டனர்.

இந்நிலையில் சம்பவ இடத்திலிருந்து நான்கு காலியான தோட்டாக்களை போலீசார் மீட்டுள்ளனர். இதுகுறித்து வழக்கு எதுவும் பதிய காவல்துறை மறுத்துவிட்டதாக சந்தோக் தரப்பில் சொல்லப்படுகிறது.

```
```

காஷ்மீர் மேற்குவங்கம் மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் பிஜேபியினர் மீது கொலை முயற்சி நடைபெற்று வருகின்ற வேளையில் பிஜேபி தரப்பு அமைதி காப்பது அனைவரயும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. குற்றவாளிகள் மீது மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க பிஜேபி எந்த ஒரு முன்னெடுப்பும் செய்யவில்லை என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

…..உங்கள் பீமா