25-12-21/15.02pm
டெல்லி : பாரத பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் ஜேபி நட்டா போன்ற பாஜக பெரும் தலைவர்கள் 1000 ரூபாய் மக்களிடம் நன்கொடை கேட்டிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இன்று மறைந்த முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய் பிறந்த தினத்தை முன்னிட்டும் பிப்ரவரி 11ம் தேதி பிஜேபி கட்சியை நிர்மாணித்த தீன் தயாள் நினைவுதினத்தை முன்னிட்டும் பிஜேபி தலைவர்கள் சிறு நன்கொடை என்கிற பெயரில் புதிய இந்தியாவை நிர்மாணிக்க பிஜேபி தங்களது காரியகர்த்தாக்களிடம் நன்கொடை கொடுக்க வேண்டுகோள் விடுத்திருக்கிறது.
மேலும் பிரதமர் நரேந்திர மோடி 1000 ரூபாய் செலுத்தி நன்கொடையை ஆரம்பித்துவைத்துள்ளார். மேலும் அமித்ஷா மற்றும் தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகியோர் 1000 ரூபாய் நன்கொடை அளித்து தங்களது ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர். இது இணையத்தில் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. கடந்த 2019-2020க்கான நிதியாண்டில் விற்கப்பட்ட தேர்தல் பத்திரங்களின் மதிப்பு 3355 கோடியாகும். இதில் பிஜேபி விற்ற தேர்தல் பத்திரங்களின் மதிப்பு 2255கோடிகளாகும்.
2018-19 நிதியாண்டுடன் ஒப்பிடும்போது 76% சதவிகிதம் அதிகமாகும். 2018-19ல் பிஜேபியின் தேர்தல் பத்திரங்களின் மதிப்பு 1450 கோடிகள் என்பது குறிப்பிடத்தக்கது. 2019-20ல் காங்கிரஸ் பெற்ற நன்கொடை 318 கோடிகளாகும். இது 2018-19 ஐ விட 65கோடிகள் குறைவாகும். மமதாவின் திரிணாமூல் 101 கோடியும் சிவசேனா 41 கோடியும், தேசியவாத காங்கிரஸ் 29 கோடியும், திமுக 45 கோடிகளும் கடந்த நிதியாண்டில் நன்கொடையாக பெற்றுள்ளன.
தேர்தல் பத்திரம் என்பது குடிமக்களோ அல்லது நிறுவனங்களோ ஒரு அரசியல் கட்சிக்கு நன்கொடை அளிக்க விரும்பினால் அதை வங்கிகளிடமிருந்து பத்திரங்களாக வாங்கி நன்கொடையாளிக்கும் நடைமுறையாகும். தேவைப்படும்போது அரசியல் கட்சிகள் அதை பணமாக மாற்றிக்கொள்ளலாம். இந்நிலையில் பலர் பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று நன்கொடை அளித்து வருகின்றனர். அதே வேளையில் பலர் சர்ச்சைக்குரிய கேள்விகளை முன்வைக்கின்றனர்.
இது நிஜமாகவே பிரதமர் போட்ட டீவீட்டா அல்லது யாராவது ஹேக் செய்துவிட்டார்களா என கிண்டலடித்து வருகின்றனர். மேலும் ஒரு நாட்டின் பிரதமர் இப்படி அரசியல் கட்சிக்காக நன்கொடை கேட்பது தவறு எனவும் விமர்சித்து வருகின்றனர். இதனிடையே பிஜேபி காரியகர்த்தாக்கள் தங்களால் முடிந்த தொகையை நாட்டின் நலனுக்காக பிரதமர் குறிப்பிட்ட வங்கிக்கணக்கிற்கு நன்கொடையாக வழங்கி வருகின்றனர்.
மேலும் மற்ற கட்சிகளை போல பிஜேபி தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிக்கவில்லை. தங்கள் தொண்டர்களிடம் மக்களிடம் நேர்மையாக நன்கொடை கேட்கிறது. இன்று ஆட்சிக்கு வந்தவர்களே மிரட்டி பணம் பறிக்கின்றனர். பிஜேபி நாட்டு மக்களுக்கான கட்சி என நெட்டிசன்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
…..உங்கள் பீமா