Friday, April 18, 2025
Home > செய்திகள் > திருவண்ணாமலையில் வெடித்த போராட்டம்..! ட்ரெண்டாகும் சாதிவெறி கலெக்டர் முருகேஷ்…!

திருவண்ணாமலையில் வெடித்த போராட்டம்..! ட்ரெண்டாகும் சாதிவெறி கலெக்டர் முருகேஷ்…!

30-1-22/17:10PM

திருவண்ணாமலை : திருவண்ணாமலை நாயுடுமங்கலத்தில் இருந்த வன்னியர்களின் புனித சின்னமான அக்னிகலசத்தை இரவோடு இரவாக யாரோ பெயர்த்து போனதாக சொல்லப்படுகிறது. ஆனால் அந்த கலசம் இருந்த இடத்தில் தற்போது காவல்துறை வாகனம் நிறுத்தப்பட்டிருக்கிறது.

குறிப்பிட்ட இருபிரிவினருக்கிடையே மோதல் அடிக்கடி வரும் சூழல் நிலவும் வேளையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் குறிப்பிட்ட ஒரு பிரிவினருக்கு சாதகமாக செயல்பட்டு வருவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. காரணமின்றி கலசத்தை மீது யார் கைவைத்தது என பாமக தொண்டர்கள் கோஷமெழுப்பி வருகின்றனர். மேலும் திருவண்ணாமலை பகுதியில் போராட்டம் நடத்திவருகின்றனர்.

`

பாமகா தரப்பினர் மாவட்ட ஆட்சியரை சந்திக்க மனு கொடுத்தும் ஆட்சியர் கொரோனா சூழ்நிலைகளை காரணம் காட்டி சந்திப்பை தவிர்ப்பதாக கூறப்படுகிறது. மாவட்ட ஆட்சியரின் ஒருதலைப்பட்ச போக்கை தொடர்ந்து சாதிவெறி கலெக்டர் முருகேஷ் என இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

```
```

….உங்கள் பீமா