02-02-2022/11.30am
பழனி : கடந்த உள்ளாட்சி தேர்தலில் பல தில்லுமுல்லுகள் நடந்தாக குற்றசாட்டு எழுந்தது. மேலும் சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வாக்குப்பெட்டிகள் கொண்டு செல்லப்பட்ட வாகனங்கள் திமுகவினரால் மறிக்கப்பட்டு பெட்டிகள் மாற்றப்பட்டதாக செய்திகள் வெளிவந்தன.


அந்த தேர்தலில் திமுக அதிக இடங்களை வென்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கும் நேரத்தில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக எதிர்க்கட்சிகள் தொடர் குற்றசாட்டை முன்வைக்கின்றன. இதனிடையே திமுகவினர் பல இடங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது பெயர் நீக்குவது என திரைமறைவு வேலைகளில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

திண்டுக்கல் மாவட்டம் பழனிசட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டது பாலசமுத்திரம் பேரூராட்சி. இந்த பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் 11ல் மொத்தம் 958 ஓட்டுக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வாக்காளர்களில் 487 ஓட்டுக்களை காரணமின்றி நீக்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.

மேலும் பட்டியலின சமூக மக்களின் ஜனநாயக உரிமையை பறித்து ஜனநாயக படுகொலையை திமுக அரங்கேற்றியிருப்பதாக பழனி தொகுதி மக்கள் விமர்சித்துவருகின்றனர்.


தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் மற்றும் தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் தலையிட்டு மேல்நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிஜேபியினர் மற்றும் பழனி தொகுதி மக்கள் கோரிக்கையெழுப்பி வருகின்றனர்.
….உங்கள் பீமா
