14-1-22/16.00PM
ஹாஜிபூர் : டெல்லி அருகே உத்திரபிரதேச எல்லையில் மர்மமான வகையில் கண்டெடுக்கப்பட்ட பையில் சக்திவாய்ந்த IED வகை குண்டுகள் இருந்ததை பார்த்த காவல்துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

டெல்லி உத்திரபிரதேச எல்லையில் அம்ரித்சர் அருகே அமைந்துள்ளது ஹாஜிபூர். இங்கு அமைந்துள்ள ஒரு பூ சந்தையில் இருசக்கரவாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் தான் கொண்டுவந்த பையை விட்டுவிட்டு சென்றிருக்கிறார். அதையடுத்து அங்கிருந்த பூ வியாபாரி ஒருவர் சந்தேகமடைந்து போலீசாருக்குதகவல் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு என்.எஸ்.ஜி படை விரைந்தது. அங்கிருந்த பையை சோதித்த அதிகாரிகள் அதிர்ச்சிக்குழாயினர். அந்த வெடிகுண்டு ரசாயனத்தால் தயாரிக்கப்பட்ட IED வகை குண்டு என தெரியவந்ததையடுத்து பத்திரமாக அதை செயலிழக்க செய்தனர்.

இதுகுறித்து பேசிய டெல்லி கமிஷனர் ராகேஷ் அஸ்தானா “காலை 9.30 அளவில் மர்மநபர் ஒருவர் இருசக்கரவாகனத்தில் வந்து இந்த வெடிகுண்டுப்பையை விட்டுச்சென்றிருக்கிறார்.


சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்டுவருகிறோம்” என தெரிவித்தார். தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் வெடிகுண்டுகளை பத்திரமாக ஆய்விற்கு எடுத்துச்செல்லும் காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வெடிகுண்டு விபத்து நிகழ்ந்த்திருந்தால் ஆயிரக்கணக்கான உயிர்கள் பறிபோயிருக்கும் என்பது நிதர்சனம்.
…..உங்கள் பீமா