Monday, December 2, 2024
Home > அரசியல் > மலர்ந்த தாமரை..! குமுறும் கோபாலபுரம்..! அனல் பறந்த அண்ணாமலை பேச்சு..!

மலர்ந்த தாமரை..! குமுறும் கோபாலபுரம்..! அனல் பறந்த அண்ணாமலை பேச்சு..!

26-11-21/12.04pm

சென்னை : தமிழகத்தின் முக்கியமான நகரங்களான திருநெல்வேலி திருப்பூர் ஈரோடு திருப்பத்தூர் உள்ளிட்ட நகரங்களில் பிஜேபியின் புது கட்டிடங்கள் நேற்று முன்தினம் பிஜேபி தேசிய செயலாளர் ஜேபி நட்டா அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை முரளிதர ராவ் மற்றும் ஐடி விங் மாநில தலைவர் நிர்மல் குமார் ஆகியோர் பங்குபெற்றனர்.

மேலும் பல முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர். தமிழகத்தில் கடந்த சில மாதங்களில் பிஜேபியின் வளர்ச்சி அதிகரித்து வருவது அரசியல் நோக்கர்களால் உற்றுநோக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திமுக காங்கிரஸ் போன்ற கட்சிகள் பிஜேபியின் அசுரவளர்ச்சியை கண்டு சற்றே ஆடிப்போயுள்ளன. இதன் தாக்கம் காங்கிரஸ் தலைவர் சிதம்பரம் மூலம் வெளிப்பட்டது.

ப.சிதம்பரம் தனது பதிவில் “கட்சி எழும்புகிறதோ இல்லையோ, கட்டிடங்கள் எழும்புகின்றன.
நான்கு நகரங்களில் மாவட்டக் கட்சி்யின் புதிய, பெருமதிப்புள்ள அலுவலகக் கட்டிடங்களை ஒரே நாளில் திறக்கும் கட்சிக்குப் பாராட்டுக்கள்” என குறிப்பிட்டிருந்தார்.

`

இதற்க்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை ” ஐயா, ஆயிரம் ஓட்டைகள் இருக்கக்கூடிய கப்பல் உங்கள் கட்சி காங்கிரஸ். அதிலே தத்தளித்து, இலக்குத் தெரியாமல் பயணிக்கும் மாலுமி நீங்கள். உங்களுடைய நகைச்சுவையை தாண்டி, நாங்கள் வளர்ந்து கொண்டிருக்கின்றோம் என்று உங்களுக்கு தெரியும். தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி” என பதிலடி கொடுத்துள்ளார்.

```
```

மேலும் ஜேபி நட்டா பேச ஆரம்பித்த உடனேயே நேரடியாக திமுகவின் அராஜகத்தை சர்வாதிகாரப்போக்கை பட்டியலிட ஆரம்பித்துவிட்டார். திமுகவுக்கு இது மேலும் புகைச்சலை கிளப்பியிருப்பதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

….உங்கள் பீமா