Monday, May 6, 2024
Home > அரசியல் > பெட்ரோல் விலையெல்லாம் குறைக்க முடியாது…! திமுக காட்டிய அதிரடி..! பயம் காட்டும் அண்ணாமலை..!

பெட்ரோல் விலையெல்லாம் குறைக்க முடியாது…! திமுக காட்டிய அதிரடி..! பயம் காட்டும் அண்ணாமலை..!

20-11-21/ 15.50pm

சென்னை : பெட்ரோல் டீசல் விலையை குறைப்பதாக தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்த திமுக தற்போது அதற்க்கு வாய்ப்பே இல்லை என திட்டவட்டமாக கூறியுள்ளது. அதற்கு தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை கூறியது திமுகவிற்கு பயத்தை உண்டுபண்ணியுள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்த சில தினங்களில் பெட்ரோல் மீதான வாட் வரியை ஐந்து ரூபாய் அளவிற்கு உயர்த்தியது. அதையடுத்து சட்டமன்றத்தில் அறிக்கை வெளியிடாமல் மீடியாக்களில் நிதிநிலையறிக்கை வெளியிட்டது சர்ச்சையை கிளப்பியது. அதை தொடர்ந்து பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் என அறிவித்துவிட்டு பொது பயணிகளின் பயணசீட்டின் விலையை அதிகரித்தது.

`

மேலும் போக்குவரத்துத்துறை டாஸ்மாக் உள்ளிட்ட அரசுவாசம் உள்ள துறைகள் நஷ்டத்தில் இயங்குவதாகவும் அறிவித்தது. இப்படி நிர்வாக கோளாறுகளுடன் ஆட்சி செய்ய திமுக அரசு திணறி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றன. திமுக நிதியமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பெற்றோ டீசல் விலையை குறைப்பதால் ஆண்டுக்கு பலநூறு கோடி நிதி வரவு பாதிக்கப்படும் என்றும் அதனால் விலை குறைப்பு சாத்தியமில்லை என்றும் பல்டி அடித்தது.

```
```

இதற்க்கு தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை அவர்கள் கொடுத்த அறிக்கை திமுகவுக்கு பயத்தை உண்டுபண்ணியுள்ளது. திமுகவின் இரட்டை வேடத்தை தோலுரிக்க வருகிற செப்டம்பர் 22 அன்று மாநிலம் தழுவிய போராட்டத்தை அறிவித்துள்ளார். இது அறிவாலயத்திற்கு குடைச்சலை கொடுத்திருப்பதாக தெரிகிறது. இந்த போராட்டமும் வெற்றிபெறும் என பிஜேபியினர் கருத்து கூறுகின்றனர்.

…..உங்கள் பீமா