Monday, December 2, 2024
Home > செய்திகள் > அம்பேத்கர் நினைவு தினம்…! கி.வீரமணி செய்த காரியம்..!

அம்பேத்கர் நினைவு தினம்…! கி.வீரமணி செய்த காரியம்..!

06-12-21/15.56pm

சென்னை : இன்று சட்டமாமேதை அம்பேத்கர் அவர்களின் நினைவுதினத்தை பல அரசியல் தலைவர்கள் நினைவு கூறிவருகின்றனர். ஆனால் திராவிடர் கழகத்தை சேர்ந்த கி.வீரமணி செய்த காரியம் நகைப்பை உண்டுபண்ணியுள்ளது.

இன்று டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை அவர்கள் சென்னை பீச் ஸ்டேஷன் நீதிமன்றம் முதல் ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள அண்ணல் அம்பேத்கர் சிலை வரை நடைபயணம் மேற்கொண்டு
மாலை அணிவித்து மரியாதை செய்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை,

“சட்டமேதை அம்பேத்கர் வாழ்ந்த 5இடங்களை பஞ்ச தீர்த்தம் என அழைக்கிறோம், இந்த ஐந்து இடங்களுக்கும் 2014க்கு முன்புவரை எவ்வித கௌரவமும் கொடுக்கப்படவில்லை.இந்த ஐந்து இடங்களிலும் நினைவு இல்லம் கட்டி பெருமைப்படுத்தியது நம் பிரதமர் திரு.நரேந்திர மோடியின் அரசு ” என தெரிவித்தார்.

`

பாரத பிரதமர் மோடி தனது பதிவில் அம்பேத்கரை நினைவு கூர்ந்துள்ளார்.

ஆனால் திராவிட கழகத்தை சேர்ந்த கி.வீரமணி “குறுக்குச்சால் ஓட்டாதீர்கள்!
வெறுமனே டாக்டர் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவிப்பதும், படத்திற்கு மாலை அணிவிப்பதும் மட்டும் போதாது” என பதிவிட்டுவிட்டு யாரும் பின்னூட்டம் இட முடியாத அளவிற்கு தனது கமெண்ட் செக்சனை பூட்டிக்கொண்டுள்ளார்.

```
```

இதனால் நெட்டிசன்கள் அவரது பதிவை மறுபதிவிட்டு கிண்டலடித்து வருகின்றனர்.

……உங்கள் பீமா