20-4-22/11.43AM
சென்னை : தமிழக அரசியலும் பொய்யும் உடன்பிறவா இரட்டை சகோதரர்கள் என்ற சொல்லாடல் உண்டு. அதை பலமுறை தமிழக அரசியல்வாதிகள் நிரூபித்ததும் உண்டு. மெரினா பீச் ஓரமாக ஏர் கூலர் வைத்து உண்ணாவிரதமிருந்து ஈழப்போரை நிறுத்திய கதையையும் நாம் கேட்டதுண்டு.

அதேபோல 20000 யானைகள் அரிசிக்கப்பல் என்ற கதையையும் நாம் கேட்டதுண்டு. இதில் சோகம் என்னவெனில் இந்த பேச்சுக்களுக்கு உலகிற்க்கே முன்னோடியான தமிழன் கைதட்டி ஆரவாரம் செய்து ரசிப்பது தான். இது இப்படி இருக்க இந்திய நாடாளுமன்ற பிரதிநிதியான எம்பி.ஜோதிமணி நேற்று தனியார் ஆங்கில தொலைகாட்சி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்று தமிழகத்தையே தலைகுனிய வைத்திருக்கிறது.
அந்த பேட்டியில் ” நான் கிராமத்தில் உள்ள எங்கள் கோவிலுக்கு வாரம்தோறும் செல்வதுண்டு. அது எங்கள் மூதாதையர் கோவில். எங்களுக்கு ராமர் என்றால் யாரென்றே தெரியாது. தமிழகத்தில் எங்குமே கோவில் கிடையாது. தமிழக மக்கள் யாரிடம் கேட்டாலும் ராமர் என்றால் யாரென்று தெரியாது. தேசிய அரசியலில் நுழைவதற்கு முன்னர்தான் ராமாயணம் மஹாபாரதம் போன்றவற்றை படித்தேன். அதன்பிறகே அந்த கதாபாத்திரம் பற்றி தெரியும்” என பச்சையாக பொய் பேசியுள்ளார்.
இதில் கொடுமை என்னவெனில் கரூர் அருகே கூட ஸ்ரீ ராமர் கோவில் உள்ளது. சேலத்தில் பிரமாண்டமான ஸ்ரீ ராமர் கோவில் அமைந்துள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருபிரதிநிதி இப்படி பொதுவெளியில் உலகறிய பொய்யான விஷயத்தை பேசுவது தமிழக அரசியலின் தரத்தை குறைப்பதாக உள்ளதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
மேலும் சுமந்த் ராமன் உட்பட பலர் ஜோதிமணியை விமர்சித்து வருகின்றனர். இனியாவது ஜோதிமணி தனது தவறை உணர்ந்து தன்னை திருத்திக்கொள்வார் என நம்பலாம்.
…..உங்கள் பீமா
