Sunday, September 27, 2026
Home > செய்திகள் > அனுமதிக்காவிட்டாலும் யாத்திரை நடக்கும்..! விஹெச்பி

அனுமதிக்காவிட்டாலும் யாத்திரை நடக்கும்..! விஹெச்பி

6-4-22/15.32PM

மேற்குவங்கம் : ராமநவமி இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாட ஹிந்து அமைப்புகள் தயாராகிவருகின்றன. ஏற்கனவே மத்திய பிரதேசத்தில் பிஜேபி அதற்க்கான சிறப்பு பூஜைகள் பிரார்த்தனைகள் என ஈடுபட்டுக்கொண்டிருக்க காங்கிரசும் ராம்லீலா நாடகம் மாநிலமெங்கும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதனிடையே மேற்குவங்கம் முழுவதும் ஆயிரம் யாத்திரைகளை நடத்த விஸ்வஹிந்து பரிஷத் அமைப்பு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசிய விஹெச்பி பெங்கால் மண்டல செய்தித் தொடர்பாளர் சௌரிஷ் முகர்ஜி, “கோவிட் காரணமாக தள்ளிப்போன பேரணி அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டதை தொடர்ந்து பிரம்மாண்டமாக 1000 யாத்திரைகள் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

ராமநவமி அன்று கொல்கொத்தாவில் 20 பேரணிகள் நடத்தப்படும். காவல்துறையின் அனுமதியை பெறுவதற்கு பதிலாக அந்தந்த பகுதிகளில் திட்டமிடப்பட்ட யாத்திரைகள் குறித்து உள்ளூர் நிர்வாகம் மற்றும் காவல்நிலையத்திற்கு தெரியப்படுத்துவார்கள். யாத்திரைகளுக்கு அனுமதி கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் எதையும் பொருட்படுத்தாமல் பேரணி ஏற்பாடு செய்வோம்.

யாத்திரைக்கு அனுமதி தேவையில்லை என நாங்கள் நினைக்கவில்லை. ஆனால் நாங்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவிப்போம்.அவர்கள் அனுமதி கொடுக்காவிட்டாலும் நாங்கள் பேரணி நடத்துவோம். ராமருக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக வில் அம்பு போன்ற ஆயுதங்களை மக்கள் ஏந்தி வருவார்கள். விஹெச்பி பேரணிகளில் ஆயுதங்களை கொண்டுவருவதில்லை” என கூறியுள்ளார்.

அடுத்தடுத்த கொலைகள் வன்முறைகள் என மேற்குவங்க சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து காணப்படும் இந்த நேரத்தில் விஹெச்பியின் யாத்திரை எந்த தாக்கத்தை ஏற்படுத்துமோ என நடுநிலையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

…..உங்கள் பீமா