6-4-22/13.22PM
மத்திய பிரதேசம் : ராமநவமி மற்றும் ஹனுமான் ஜெயந்தி போன்ற விழாக்களில் சிறப்பு பிராத்தனைகள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்த காங்கிரஸாரை தலைமை கேட்டுக்கொண்டதோடு சுற்றறிக்கையும் அனுப்பியுள்ளது.

காங்கிரஸ் தலைவர்களான ராகுல் மற்றும் ப்ரியங்கா இருவரும் எந்த ஒரு மாநில தேர்தல் வந்தாலும் கோவிலுக்கு செல்வது திருநீறு மற்றும் சந்தனம் பூசுவது என தங்களை ஹிந்துக்களாக காட்டிக்கொள்ள முயல்வர். இது நாடறிந்த ஒன்று. இதனிடையே அடுத்த ஆண்டு மத்யபிரதேசத்தில் வரவிருக்கும் தேர்தலை மனதில்கொண்டு இப்போதே ஹிந்து வாக்குவங்கியை குறிவைக்க தொடங்கியுள்ளது காங்கிரஸ்.
ஏற்கனவே மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள ராமர் கோவில் ஹனுமான் கோவில் மற்றும் சித்ரகூட் ஹிந்து வழிபாட்டு தலங்களில் பிஜேபி ராமநவமியை சிறப்பாக கொண்டாடி வருகிறது. மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு கோவிலிலும் மண் விளக்கு ஏற்றப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் ராமநவமி அன்று ராமகதா பாராயணம் மற்றும் ராம்லீலாவை இயற்றுவது போன்ற நிகழ்ச்சிகளில் ஈடுபடவேண்டும் என அறிவித்துள்ளது.
மேலும் முன்னாள் முதல்வர் கமல்நாத் ராமநவமி அன்று சிறப்பு பூஜை நடத்துவதுடன் ஹனுமான் ஜெயந்தி அன்று சிந்தவராவில் சிறப்பு மதநிகழ்ச்சியை நடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிஜேபி “இது ஒரு கபடநாடகம். காங்கிரஸ் தலைவர்கள் ராமர் ஒரு கற்பனை பாத்திரம் என கூறினார்கள். அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் வருவதையொட்டி நாடகம் போடுகிறார்கள்” என விமர்சிக்கின்றனர்.

மேலும் உள் அமைச்சர் நரோத்தம் ” கோவிலுக்கு காங்கிரஸ் தலைவர்கள்செல்வதால் மக்கள் ஏமாந்துவிட மாட்டார்கள். இப்ஃதாருக்கு செல்பவர்கள் இப்போது கோவிலுக்கு செல்ல ஆரம்பித்துள்ளனர்” என கிண்டலடித்தார். போபால் எம்.எல்.ஏ ஆரிப் மசூத் கூறுகிறார் ” புதிதாக இந்த பாரம்பரியத்தை தொடங்குவதன் நோக்கம் என்ன.

ரம்ஜான் கொண்டாட இதுபோல ஏன் கடிதம் அனுப்பவில்லை. புனிதவெள்ளி மற்றும் ஈஸ்டரை கூட அனுசரிக்கிறீர்களா. ஒரு சமூகத்தை கவர்ந்திழுக்க நீங்கள் செய்யும் இந்த செயல் சிறுபான்மையினரை காயப்படுத்தும்” என கூறினார். இந்த ஆரிப் மசூத் காங்கிரசை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
…..உங்கள் பீமா
