Tuesday, April 23, 2024
Home > செய்திகள் > மாப்பிளா கலவரம் : தியாகிகள் பட்டியலில் இருந்து கலவரக்காரர்கள் பெயர் நீக்கம்..!

மாப்பிளா கலவரம் : தியாகிகள் பட்டியலில் இருந்து கலவரக்காரர்கள் பெயர் நீக்கம்..!

29-3-22/10.47AM

புதுதில்லி : கேரளா மாநிலம் மலபார் பகுதியில் ஏற்பட்ட கிளர்ச்சியில் ஆயிரக்கணக்கான ஹிந்துக்கள் படுகொலை செய்யப்பட்டனர். பலர் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டனர். மலபாரிலிருந்து ஆயிரக்கணக்கான ஹிந்துக்கள் அகதிகளாக வெளியேறினர். இந்த கலவரத்துக்கு மூளையாக செயல்பட்ட வரியம் குஞ்சமேடு உள்ளிட்டோர் கேரளா கம்யூனிச அரசால் சுதந்திர போராட்ட தியாகிகள் என சட்டசபையில் அறிவிக்கப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து கேரளமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இதை எதிர்த்து பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தினர். இந்நிலையில் கடந்த சிலமாதங்களுக்கு முன்னர் கலவரக்காரர்களை சுதந்திரபோராட்ட தியாகிகள் என கூறி பாடப்புத்தகத்தில் இடம்பெறச்செய்ய பினராயி அரசு முயற்சி செய்ததோடு அதை பாடப்புத்தகத்தில் இடம்பெற்றது.

`

இதையடுத்து பிஜேபியினர் கேரளாவில் பல இடங்களில் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் (ICHR) இடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் குஞ்சமேடு ஹாஜி, திருங்கரடி அலி மொய்தீன் குட்டி ஹாஜி உள்ளிட்ட 200 பேரை தியாகிகள் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு கவுன்சில் அங்கீகரித்துள்ளது.

```
```

ICHR இயக்குனர் எம்ஜி உபாத்யாயா, கோட்டயம் சி.எம்.எஸ் கல்லூரி பேராசிரியர் ஐசக் மற்றும் ஹிமான்சு சதுர்வேதி ஆகியோர் கொண்ட குழுவின் பரிந்துரையை ஏற்று மத்திய கவுன்சில் இந்த முடிவை ஏற்றுக்கொண்டதோடு கலாச்சார அமைச்சகத்திடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த குழு 2021லேயே தனது அறிக்கையை தயார் செய்தும் பெருந்தொடரின் ஒப்புதல் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. இனி வரும் பதிப்புகளில் கலவரக்காரர்களின் பெயர்கள் இடம்பெறாது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதே பட்டியலில் ஈ.வே.ராமசாமி பெயரும் இடம்பெற்றிருப்பது நினைவுகூரத்தக்கது.

…..உங்கள் பீமா