6-4-22/12.31PM
புதுதில்லி : பிஜேபியின் 42 ஆவது நிறுவன தினத்தை முன்னிட்டு கட்சி தொண்டர்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார். அதற்குமுன்னர் கட்சி தலைமையகத்தில் தேசிய தலைவர் ஜேபி.நட்டா கட்சிக்கொடியை ஏற்றினார்.

பாரதிய ஜனதா கட்சி 1980 ஏப்ரல் மாதம் 6 அன்று ஜனசங்க உறுப்பினர்களால் துவக்கப்பட்டது. இன்று 42ஆவது நிறுவன நாளை முன்னிட்டு பிரதமர் மோடி உரையாற்றினார்.

அவர் கூறுகையில் ” நாட்டில் தற்போது இரண்டுவகையான கட்சிகள் உள்ளன. ஒன்று குடும்ப பக்தி அரசியல். மற்றொன்று தேசபக்தி அரசியல். நான்கு மாநில தேர்தல்களில் ஆட்சியை தக்கவைத்துக்கொண்ட இந்த நேரத்தில் நிறுவன நாள் வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

கடந்த முப்பது ஆண்டுகளில் 100 ராஜ்யசபா எம்பிக்களை கொண்ட முதல் கட்சி என்ற பெருமையை பிஜேபி பெற்றுள்ளது. நிறுவன நாளான இன்று ஜனசங்க நாளிலிருந்து எண்ணெய் விளக்குடன் நடந்தவர்களையும் பிறகு தாமரையுடன் நடந்தவர்களையும் நாம் நினைவுகூரவேண்டும். மூன்று நான்கு தலைமுறையினர் கட்சிக்கு பெருமை சேர்க்கும் பணியில் தங்களை அர்ப்பணித்துள்ளனர்.

எந்த கட்சியின் அரசாக இருந்தாலும் நாட்டுக்கு எதுவும் செய்யப்போவதில்லை என மக்கள் விரக்தியில் இருந்தார்கள். ஆனால் இன்று நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் தேசம் வேகமாக முன்னேறுகிறது. தேசம் மாறிவருகிறது என கூறுகின்றனர். இன்று எந்த அச்சமோ அழுத்தமோ இன்றி உறுதியாக நிற்கும் இந்தியாவை உலகநாடுகள் பார்க்கிறது.


உலகம் முழுவதும் இரண்டு பிரிவுகளாகப் போட்டியிடும்போது இந்தியா மனிதநேயத்தைப் பற்றி உறுதியாகப் பேசும் நாடகத்தைப் பார்க்கவும்” என மேலும் பிஜேபி எம்பிக்கள் அனைவருக்கும் நேற்று காவிநிறை தொப்பி வழங்கப்பட்டது.
……உங்கள் பீமா
