5-4-22/16.22PM
மும்பை : ஆஸ்கர் மற்றும் கிராமி விருதுகள் மெமோரியல் அட்டவணையில் மறைந்த மாண்புமிகு லதா மங்கேஸ்கர் அவர்களின் பெயர் புறக்கணிக்கப்பட்டதை தொடர்ந்து கங்கனா ஆவேசமடைந்துள்ளார்.
கடந்த ஞாயிறன்று நடைபெற்ற மெமோரியல் விழாவில் மறைந்த பாடகி லதா மங்கேஷ்கர் அவர்களின் பெயர் புறக்கணிக்கப்பட்டது. இதுகுறித்த தனது ஏமாற்றத்தை இன்ஸ்டாகிராமில் வெளிப்படுத்தினார். முன்னதாக நடைபெற்ற அகாடமி பட்டியலிலும் லதா அவர்களின் பெயர் விடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து பேசிய கங்கனா ரணாவத்,
” நாம் சர்வதேச விருதுகள் என கூறிக்கொண்டு பழம்பெரும் கலைஞர்களை அவர்களது இனம் மற்றும் அவர்களது சித்தாந்தம் காரணமாக புறக்கணித்து உள்நோக்கத்தோடு ஒதுக்கிவைக்கும் எந்த ஒரு விருதுகளுக்கும் எதிரான நிலைப்பாட்டை எடுக்கவேண்டும். ஆஸ்கார் கிராமி இரண்டும் பாரத ரத்னா லதா மங்கேஷ்கர் அவர்களுக்கு அஞ்சலி செலுத்த தவறிவிட்டனர்.

உலகளாவிய விருதுகள் என கூறிக்கொண்டு ஒருசார்பு நிகழ்வுகளை ஊடகங்கள் ரசிகர்கள் அடையாளம்கண்டு புறம்தள்ளவேண்டும். இவர்களை முற்றிலும் புறம்தள்ளவேண்டும். இந்த விருதுகளையும் நாம் புறக்கணிக்கவேண்டும்” என பதிவிட்டுள்ளார். மேலும் 64ஆவது கிராமி விருதுகள் மெமோரியல் பிரிவில் ஸ்டீபன் சொன்ஹெய்ம் மற்றும் டெய்லர் ஹாக்கின்ஸ் உள்ளிட்ட பலருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த பிரிவில் லதா அவர்களின் பெயர் விடுபட்டதால் பல நெட்டிசன்கள் தங்கள் மனக்குமுறலை வெளிப்படுத்தியிருந்தனர்.
மேலும் காங்கிரஸ் தலைவர் அபிஷேக் சிங்க்வி ” இந்தியர்கள் ஏன் மேலைநாடுகளிடம் வேலிடேசன் எதிர்பார்க்கிறீர்கள்” என பதிவிட்டுள்ளார்.
….உங்கள் பீமா
#grammy #award #oscar #kanganaranawat #latamangeshkar
