Wednesday, May 20, 2026
Home > செய்திகள் > இதெல்லாமா பாடப்புத்தகத்தில் வரும்..? தலையில் கைவைத்த சமூக ஆர்வலர்கள்

இதெல்லாமா பாடப்புத்தகத்தில் வரும்..? தலையில் கைவைத்த சமூக ஆர்வலர்கள்

5-4-22/11.40AM

புதுதில்லி : செவிலியர்களுக்கான பாடத்திட்டத்தில் சமூகவியல் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ஒரு அத்தியாயம் சமூகவலர்கள் மற்றும் செவிலியர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

டி.கே.இந்திராணி என்பவர் எழுதியுள்ள அந்த புத்தகத்தின் ஒரு அத்தியாயத்தில் வரதட்சிணை வாங்குவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து எழுதியுள்ளார். வரதட்சிணை வாங்குவதால் அது ஒரு புதிய குடும்பத்தை நிறுவுகிறது என்றும் ஒரு வீட்டில் உபகரணங்கள் தளவாடங்கள் பொருட்கள் மற்றும் பாத்திரங்கள் துணிகள் வாங்க பயன்படுகிறது.

மேலும் குடும்பசொத்தில் பங்கு பெற வரதட்சிணை மறைமுக உதவி செய்கிறது. மேலும் ஒரு பெண் அசிங்கமாக இருந்தால் அவரை அதிக வரதட்சணை கேட்டு திருமணம் செய்துகொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து ராஜ்யசபா எம்பியான பிரியங்கா சதுர்வேதி மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திரா பிரதமரை குறிப்பிட்டு இந்த நூலை படத்திட்டத்திலிருந்து நீக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

மேலும் செவிலியர்கள் கூட்டமைப்பு இதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்து உள்ளது. பல இடங்களில் இன்று போராட்டம் நடைபெற்று வருகிறது.

….உங்கள் பீமா

#dowry #socialbook #dkindrani #author