Wednesday, May 20, 2026
Home > செய்திகள் > இனி கஞ்சா குடிப்பியா..? நூதன தண்டனை..! வைரலாகும் வீடியோ

இனி கஞ்சா குடிப்பியா..? நூதன தண்டனை..! வைரலாகும் வீடியோ

5-4-22/11.00AM

தமிழ்நாடு : இந்தியாவில் போதைகலாச்சாரம் மெல்ல மெல்ல தலைதூக்கி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு போதைவஸ்துக்கள் நடமாட்டம் மிகுந்திருப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துவருகின்றனர்.

இதனிடையே ஆபரேஷன் கஞ்சா 2.0 என்ற திட்டத்தை தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தொடங்கிவைத்தார். இதைத்தொடர்ந்து 28 மார்ச் முதல் 30 மார்ச் வரை திருநெல்வேலி பகுதியில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் 10 கிலோ கஞ்சா பிடிபட்டுள்ளது. மேலும் 19பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அதேபோல கடந்த மார்ச் மதம் திருவள்ளூர் மாவட்டத்தில் 200கிலோவுக்கு மேலான கஞ்சா பிடிபட்டுள்ளது.

அதேபோல வேதாரண்யம் கடற்கரை பகுதியில் கடந்த மாதம் 500கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கடந்த மாத இறுதியில் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட கஞ்சா வேட்டையில் 150 கிலோ கைப்பற்றப்பட்டு 350பேருக்கும் மேலானோர் கைதுசெய்யப்பட்டனர். தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்திருப்பதையும் இளைஞர்கள் சிறுவர்கள் என பலரும் போதைக்கு அடிமையாகி வருவதையும் இது உணர்த்துவதாக சமூக ஆர்வலர்கள் விமர்சித்துவருகின்றனர்.

இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் சூர்யாபேட் மாவட்டம் கோதாட் கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் தனது தாயிடம் பணம் கேட்டு தகராறு செய்து வந்தான். பொறுத்து பார்த்த அவனது தாய் ஒருகட்டத்தில் தனது மகன் கஞ்சாவுக்கு அடிமை என தெரிந்ததும் வீட்டு வாசலில் இருந்த மின்கம்பத்தில் கட்டிவைத்து முகத்தில் மிளகாய்பொடியை அப்பினார்.

மேலும் இனி கஞ்சா குடிக்கமாட்டேன் என சொன்னால்தான் அவிழ்த்துவிடுவேன் என கூறினார். அந்த சிறுவன் மாட்டேன் என கதறும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

…..உங்கள் பீமா

#ganja #addict #telengana #suryapet #viralvedio