28-3-22/10.04AM
ஹைதராபாத் : இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு பிறகு அதிக அளவில் பரபரப்பாக பேசப்படும் அமைப்புகளில் விஷ்வஹிந்து பரிஷத் அமைப்பும் ஒன்று. ஹிந்து கோவில்கள் கலாச்சாரங்கள் பாதிக்கப்படும்போது முன்னனியில் நின்று குரல்கொடுக்கும் அமைப்புகளில் மிக முக்கியமான அமைப்பு இதுவாகும்.
சமீபத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் கொல்லப்பட்ட ஹர்ஷா படேலுக்கு நீதிவேண்டி போராட்டத்தில் குதித்து வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வைத்தது, மேலும் கர்நாடக ஹிந்து கோவில்களில் மாற்றுமத வியாபாரிகள் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கடுமையாக போராடிவருகிறது. இந்நிலையில் ஹைதராபாத் முத்துவலம்மா பகுதியில் அமைந்துள்ள சர்ச்சைக்குரிய எவாஞ்சலிஸ்ட் தெரேசாவின் சிலையை அகற்ற கோரி நீதிமன்றத்தில் இந்த அமைப்பு வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ் சந்திர சர்மா மற்றும் நீதிபதி அபிநந்த குமார் தலைமையிலான அமர்வு கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்திருந்தது. தீர்ப்பில் சர்ச்சைக்குரிய வகையில் நிறுவப்பட்டுள்ள சிலையை வரும் 10 நாட்களுக்குள் அகற்றவேண்டும் என கம்மம் மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


இதுகுறித்து பேசிய மாவட்ட பொதுச்செயலாளர் அல்லிகா அஞ்சய்யா” உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களை மீறி அதிகாரிகளின் முறையான அனுமதியின்றி நீதிமன்றத்தை அவமதிக்கும் நோக்கில் வைக்கப்பட்ட சிலையை அகற்ற கோரி உயர்நீதிமன்றத்தை நாடினோம். இந்த தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம்” என செய்தியாளர்களிடம் கூறினார்.
….உங்கள் பீமா
