Sunday, June 28, 2026
Home > செய்திகள் > தமிழகத்தில் சைனிக் பள்ளிகள்..! அனுமதிக்குமா தமிழக அரசு..?

தமிழகத்தில் சைனிக் பள்ளிகள்..! அனுமதிக்குமா தமிழக அரசு..?

26-3-22/13.32pm

இந்தியா : முன்னாள் ராணுவ அமைச்சர் மேனன் அவர்களால் 1960களில் கொண்டுவரப்பட்டது சைனிக் பள்ளிகள். இந்தியா முழுவதும் 33 சைனிக் பள்ளிகள் உள்ளன. தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியில் உள்ள அமரவாதிநகரில் தமிழகத்திற்கான சைனிக் பள்ளி அமைந்துள்ளது.

கல்வியாண்டில் புதிய சேர்க்கைக்கான கட்டணம் 1.05,698 (பொதுப்பிரிவு). 1.04,198( SC/ST ). ஒவ்வொரு சைனிக் பள்ளிகளிலும் மாநிலத்தைச் சேர்ந்த சிறுவர்களுக்கு 67 சதவீதமும் மற்ற மாநிலங்கள் யூனியன் பிரதேச சிறுவர்களுக்கு 33% இடமும் ஒதுக்கப்படுகிறது. இதில் பழங்குடியினருக்கு 7.5% சதவீதமும் 15% பட்டியலினத்தவர்க்கும் 25% முன்னாள் படைப்பிரிவினர் உட்பட சேவைப்பணியாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

அரசுசாரா நிறுவனங்கள் தனியார் பள்ளிகள் மற்றும் மாநிலங்களுடன் இணைந்து இந்தியா முழுவதும் புதிய சைனிக் பள்ளிகள் திறக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் விண்ணப்பிக்க மாநிலங்களை அழைத்துள்ளது. இதை நேற்று பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சர் அஜய் பட் எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் 50 சதவிகித கல்விக்கட்டணத்தை மத்திய அரசே ஏற்றுக்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் செயல்படும் சைனிக் பள்ளியில் இந்தி ஆங்கிலம் தமிழ் என மும்மொழி திட்டம் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் குதிரையேற்றம் நீச்சல், மலையேற்றம், துப்பாக்கிசுடுதல், விமானம் மற்றும் கப்பல் அமைப்புகள் குறித்து கற்று தரப்படுகின்றன. தேசிய பாதுகாப்பு அகாடமியில் சேர மாணவர்களுக்கு பயிற்சியளிக்க தொடங்கப்பட்ட இந்த பள்ளியில் முப்படைகளிலும் நுழையும் வண்ணம் ஒருங்கிணைந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்திய கடற்படை கடற்படையின் சேரும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கிறது. ஆறு மற்றும் ஒன்பதாம் வகுப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு அகில இந்திய சைனிக்பள்ளிகள் நுழைவுத்தேர்வு (AISSEE) நடத்தப்படுகிறது. இந்த பள்ளிகளில் ஆண் பெண் இருபாலினத்தவருக்கு மட்டுமே அனுமதி உண்டு. ஆறாம் வகுப்பில் சேர 10-12 வயது நிரம்பியிருக்கவேண்டும். நேரடியாக 9 ம் வகுப்பில் சேர 13-15 வயது மிகாமல் இருக்கவேண்டும்( இது ஆண்களுக்கு மட்டும்).

https://aissee.nta.nic.in என்ற இணையதளத்தில் மேலதிக விவரங்களை பெறலாம்.

சைனிக் பள்ளிகள் தமிழகத்தில் அமைக்க தமிழக திமுக அரசு முன்வருமா என்பதே மக்களின் எதிர்பார்ப்பு. மேலும் தமிழகத்தில் பிரிவினைவாத சக்திகள் பெருகிவருவதாக சொல்லப்படும் இந்தவேளையில் சைனிக் பள்ளிகள் கேந்திர வித்யாலயாக்கள் திறப்பதன் மூலம் மாணவ சமுதாயத்தில் நல்ல மாற்றங்களை கொண்டுவரலாம் என்பது நடுநிலையாளர்கள் கருத்தாக உள்ளது.

…..உங்கள் பீமா