Sunday, May 3, 2026
Home > செய்திகள் > NIA வசம் செல்லும் நீதிபதிகள் மிரட்டல் வழக்கு..!

NIA வசம் செல்லும் நீதிபதிகள் மிரட்டல் வழக்கு..!

23-3-22/13.40pm

கர்நாடகா : கடந்த சிலநாட்களுக்கு முன்னர் தவ்கீத்ஜமாஅத் சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில் ஆட்டோ ஏற்றி நீதிபதி கொல்லப்பட்டது போல உயர்நீதிமன்ற நீதிபதிகள் கொல்லப்படுவார்கள் என எச்சரிக்கை மற்றும் மிரட்டல் விடப்பட்டது.

kul

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதும் கர்நாடக அரசு உஷாரானது. அதையடுத்து கர்நாடக போலீசார் ஒருவரை கைது செய்தனர். மற்றவர்கள் தலைமறைவாகினர். நேற்று மேலும் இருவரை காவல்துறை கைதுசெய்து நீதிமன்ற காவலில் வைத்துள்ளது. அவர்கள் இன்னும் கர்நாடக காவத்துறையிடம் ஒப்படைக்கப்படவில்லை.

இந்நிலையில் கர்நாடக உள்துறை அமைச்சர் அரகா ஜனனேந்திரா செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது “உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு கொலைமிரட்டல் விடப்பட்டதை தொடர்ந்து மூன்று நீதிபதிகள் மற்றும் தலைமை நீதிபதி ஆகியோருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். விபரங்களை ஆராய்ந்தபின் இந்த வழக்கை NIAவிடம் ஒப்படைக்க பரிசீலித்து வருகிறோம்.

இந்திய இறையாண்மைக்கு எதிராக விடப்பட்டிருக்கும் இந்த சவாலை ஒருபோதும் புறந்தள்ள முடியாது. இது நீதித்துறை மீது விடப்பட்ட பெரும் சவால். இந்த வழக்கில் ஒருவர் பெங்களூர் காவல்துறையால் கைதுசெய்யப்ட்டிருக்கிறார். அவரை மேஜிஸ்திரேட் எட்டுநாள் காவலில் வைத்துள்ளார். இந்த குற்றப்பின்னணி வழக்கை பெங்களுர் காவல்துறையே விசாரிக்கும். தகவல்கள் திரட்டப்பட்ட பின் NIA விடம் ஒப்படைக்கப்படலாம்” என தெரிவித்தார்.

kul

இதனிடையே நேற்று சென்னை வடபழனி அருகே அசோக் நகர் பகுதியில் செல்வம் எனும் நீதிபதி கார் தாக்கப்பட்டதுடன் அவரது உதவியாளருக்கு அரிவாள் வெட்டும் விழுந்தது.

தமிழகத்தில் நீதிபதிகளுக்கு கொலைமிரட்டல் விடப்பட்டிருக்கும் வேளையில் நடந்திருக்கும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

….உங்கள் பீமா