23-3-22/16.02pm
கேரளா : கேரளா மாநில பிரபல நடனக்கலைஞரான நீனா பிரசாத் தனது முக நூலில் கலாம் பாஷா என்பவரால் நேர்ந்த சோகத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதையடுத்து நீதிபதிக்கு பலர் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
kulபாலக்காட்டில் அமைந்துள்ளது மோயன் எல்.பி அரசுப்பள்ளி. இங்கு நேற்று முன்தினம் நடனக்கலைஞர் நீனா பிரசாத்தின் மோஹினியாட்டம் நடனநிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நடனம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே அந்த நிகழ்ச்சி போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டது. இதற்கு போலீசார் நிர்வாகத்திடம் கொடுத்த விளக்கம் கேலிக்கூத்தாக அமைந்துவிட்டது.

இந்த பள்ளியின் பின்புறம் மாவட்ட நீதிபதி கலாம் பாஷா தங்கியுள்ளார். இந்த நிகழ்ச்சியின் போது ஒலியினால் தொந்தரவாக இருந்ததால் அவரை பாதுகாப்புக்கு அழைத்து சென்ற காவல்துறை அவரை அழைத்து வரும் நிகழ்ச்சியை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளதாகவும், அந்த பேரணியை ரத்து செய்யுமாறும் போலீசார் உத்தரவிட்டனர். இதுகுறித்து நீனா தனது சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

” நான் ஒரு பெண்ணாக கலைஞராக நான் அவமானபடுத்தப்பட்டதாக உணர்கிறேன். ஒரு கலைஞராக இந்த சம்பவம் முதல் அனுபவம். நான் எனது எதிர்ப்பை பதிவுசெய்ய விரும்புகிறேன்” என கூறியுள்ளார். மேலும் செய்தியாளர்களை இன்று சந்தித்த நீனா ” இரண்டுவருட நீண்ட உறக்கத்திற்கு பிறகு இப்போது தான் கலைஞர்கள் மேடையேறியிருக்கிறோம். இது கலைஞர்களுக்கு ஏற்பட்ட அவமானம்.
kulஇந்த நிகழ்ச்சிக்காக எனது நேரத்தை நிறைய செலவழித்துள்ளேன். வயலின் மிருதங்கம்,எடக்கா போன்ற வாத்தியங்களுடன் நாங்கள் நடனத்தில் லயித்திருந்தோம். கலாம் பாஷாவின் இந்தச் செயல் அவமானத்துக்குரியது” எனக் கூறினார்.

நீதிபதிகள் கொலை மிரட்டல் விடுத்த போது அவர்களின் பின்னால் நின்ற மக்கள் ஒரு நீதிபதியின் இந்த முறையற்ற செயலால் அதிருப்தி அடைந்துள்ளதாக நடுநிலையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
…..உங்கள் பீமா
