Sunday, May 3, 2026
Home > செய்திகள் > தலித் பெண் கூட்டுப்பாலியல் பலாத்காரம்..! சிக்கிய திமுகவினர்..! குரல்கொடுப்பாரா திருமா..?

தலித் பெண் கூட்டுப்பாலியல் பலாத்காரம்..! சிக்கிய திமுகவினர்..! குரல்கொடுப்பாரா திருமா..?

22-3-22/11.40am

விருதுநகர் : விருதுநகர் மேலத்தெருவை சேர்ந்த தலித் பெண் ஒருவரை திமுக நிர்வாகிகள் மற்றும் நான்குபேர் கொண்ட கும்பல் கூட்டுப்பாலியல் செய்து பலநாட்களாக அபலைப்பெண்ணை கொடுமைக்குள்ளாக்கியது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

உள்ளூர் திமுக இளைஞரணி பிரமுகரான ஹரிஹரன் என்பவர் விருதுநகர் பகுதியில் உள்ள பெண்களிடம் ஆசைவார்த்தை காட்டி மயக்கி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் 22 வயது தலித் பெண்ணுடன் ஹரிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவரை தனது ஆசைக்கு இணங்கவைத்ததோடு மட்டுமல்லாமல் அந்தரங்க வீடியோவையும் எடுத்து மிரட்டியுள்ளார்.

அந்த வீடியோக்களை தனது நண்பர்களுக்கும் பகிர்ந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவருடன் நான்கு சிறுவர்களும் இந்த கொடூர செயலில் ஈடுபட்டிருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட தலித் பெண் இந்த கொடுமையை தாங்க முடியாமல் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அதையடுத்து காவல்துறை எட்டு பேரை கைது செய்துள்ளது.

அவர்கள் மீது பட்டியலிடப்பட்ட பழங்குடியின வன்கொடுமை தடுப்பு சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்துள்ளனர். ஹரிஹரன்,ஜுனைத் அஹம்மது,பிரவீன்,மாடசாமி ஆகியோர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் நான்கு சிறுவர்கள் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்பட்டுள்ளனர். நான்கு சிறுவர்கள் முறையே 10,11,12 வகுப்புகள் பயின்றுவந்தது குறிப்பிடத்தக்கது. சிறுவர்கள் நலன்கருதி அவர்கள் அடையாளங்களை போலீசார் வெளியிட மறுத்துவிட்டனர்.

தலித்துகளின் காவலரான தொல்.திருமாவளவன் மற்றும் பெண்களை பாதுகாக்கும் முன்னின்று குரல் கொடுக்கும் எம்பி ஜோதிமணி மற்றும் திராவிடர் கழக லூலூ மற்றும் சுந்தரவல்லி ஆகியோர் இந்த சம்பவத்திற்கு இனி பொங்கி எழுவார்கள் என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

…..உங்கள் பீமா